குவாலியர், செப்.1 மத்தியப் பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில், நேற்று (31.8.2025) அதிகாலை 5 மணியளவில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் பம்புக்கு பைக்கில் இருவர் வந்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, 55 வயதான தேஜ் நாராயண் நர்வாரியா என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் பைக்கில் வந்த நபர்கள் ஊழி யருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது, அவர்கள் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டனர். இதில் அவரின் கையில் குண்டடி பட்டது.
தாக்குதல் தொடர்பான காட்சிகள் பெட்ரோல் பங்கின் கண்காணிப்புக் கேமிரா வில் பதிவானது.
காயமடைந்த நர்வாரியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளிலின் மூலம் தாக்கு தல் நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ள தாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.