டில்லி, ஆக.30 சி.பி.எஸ்.இ., 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பள்ளி பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., பல திருத்தங்களை செய்து வெளியிட்டு வருகிறது. சிபிஎஸ்இ பள்ளி புத்தகத்தில் இருந்து முகலாயர், சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.