டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*திமுக தலைவராக எட்டு ஆண்டுகள்: இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவையும் பலத்தையும் தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தலைவர்கள் புகழாரம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு வகையில் தான் தீர்வு காண முடியும். ஆளுநருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்து உத்தரவு கோர முடியாது என ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “மோடி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய வாக்கு திருட்டு பிடிபட்டுவிட்டது, இப்போது அவரால் தப்பிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.” என ராகுல் காட்டம்.
தி இந்து:
*சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்
தி டெலிகிராப்:
* ஆளுநர்கள் மசோதாக்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தால், பிரிவு 200 இல் உள்ள ‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொல் அர்த்தமற்றது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கருத்து.
– குடந்தை கருணா