25.8.2025 திங்கள் மேட்டூர் மாவட்ட கழக காப்பாளரும், கவிஞருமான சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 76ஆவது பிறந்தநாளை கழக குடும்ப விழாவாக, அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழக காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் தலைமையில் சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் முன்னிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெய ராமன் ஒருங்கிணைப்பில், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்-இரஞ்சிதம் இணை யருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தனர்.