செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர் – சென்னை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் 23.8.2025 அன்று மாலை 6 மணிக்கு புதுவண்ணை ஏ.ஈ.கோவில் தெருவில் (இரவுண்டானா) சுயமரியாதைச் சுடரொளி க.பலராமன் நினைவு மேடையில் சிறப்பாக நடைபெற்றது.
எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டத் திற்கு புதுவண்ணை கழக அமைப்பாளர் சு.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட ப.க. தலைவர் ஆர்.கே.ஆசைத்தம்பி வரவேற்புரை ஆற்றினார்.
திருவொற்றியூர் மாவட்ட கழக தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட செயலாளர் ந.இராசேந்திரன், துணைத் தலைவர் மா.சேகர், காப்பாளர் ஓவியர் பெரு.இளங்கோ முன்னிலை வகித்து மாநாடு குறித்து விளக்கிப் பேசினர்.
தி.மு.க. மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் என்.மருதுகணேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ், உலக முதல்வன் (வி.சி.க.), கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, மேனாள் மாவட்ட தலைவர் பெ.செல்வராஜ், எண்ணூர் கழக தலைவர் மு.மணிகாளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த, இராதாகிருட்டிணன் நகர் தொகு தியின் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் எபினேசர் அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.
நிறைவாக திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். அவ்வியக்கத்தின் பிரச்சார வேகத்தினால் மக்கள் சமூகத்தில் விளைந்த மாற்றங்கள் எத்தகையன என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் கூறினார்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனக் கூட்டம் எடுத்து வருகின்ற முயற்சிகளைக் குறிப்பிட்டு, அகில இநதிய அளவில் சர்வாதிகார மனப்பான்மையோடு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதிர்க்கட்சிகளுக்கெதிரான அடக்குமுறைப் போக்கினையும் விளக்கிப் பேசினார். அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறான வழிகளில் ஒன்றிய அரசினரால் ஏவி விடப்படுகின்ற எதேச்சதிகாரப் போக்கையும் அம்பலப் படுத்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழகத்தின் கருங்சட்டைப் படை வீரர்களும் கட்டிக் காத்து வருகின்ற ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியின் வெற்றியே தமிழ்நாட்டுத் தமிழர்களை மேம்படுத்தும் சக்தி படைத்து – பார்ப்பன மதவெறி சக்திகளின் கொட்டங்களுக்கு அதுவே சரியான பதிலடியாக அமையும் என தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
வழக்குரைஞர் அ.அருள்மொழிக்கு கழக மகளிரணித் தோழர்கள் ஒருங் கிணைந்து பயனாடை அணிவித்துச் சிறப்பித்தனர்.
இப்பொதுக்கூட்டம் முன் னிட்டு, விளம்பர பேனர்கள் நிறுவப்பட்டு, பொதுக்கூட்டத் திடலிலும், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை யிலும் கழக கொடிக் கம்பங்கள் சிறப்பான வகையில் நடப்பட்டிருந்தன.
இக்கூட்டத்தில் திருவொற்றியூர் பகுதி தலைவர் ஆ.துரைராவணன், துணைச் செயலாளர் மு.ஜான்சன், எண்ணூர் கழக தலைவர் பொ.இராமச்சந்திரன், செயலாளர் த.சங்கர், அசோக், லேலண்ட் மா.இலட்சுமணன், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பா.சரவணகுமார், வண்ணை ஆ.வெங்கடேசன், பகுதி துணை செயலாளர் சே.தமிழரசி, புதுவண்ணை ஏ.மணிவண்ணன், எண்ணூர் தோழர்கள் கோ.இராமு, தி.நா.கண்ணன், இர.சரவணன், மகளிரணியைச் சேர்ந்த மோ.விஜயா, சி.இந்திரா, இரா.வளர்மதி, ம.யுவராணி, ம.செம்மொழி ஆகிய தோழர்களும், திரளாகப் பொது மக்களும் பங்கேற்றனர். நிறைவாக புது வண்ணை தோழர் த.கவுதம் நன்றி கூறினார்.
அம்மாப்பேட்டை – சேலம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 04-09-2025 அன்று நடக்கவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்கப் பரப்புரைப் பொதுக்கூட்டம் சேலம் மாநகரில் தந்தை பெரியார் பகுத்தறிவுச் சுடர் நினைவுத்தூண், மிலிட்டரி ரோடு அம்மாப்பேட்டையில் 24-08-2025 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சி.பூபதி ஒருங்கிணைத்தார். மாவட்ட காப்பாளர் கி.ஜவகர், அரூர் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வம், நாமக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, நாமக்கல் நகரத்தலைவர் ராமச்சந்திரன் சேலம் மாவட்டத் துணைத் தலைவர் சு.இமயவரம்பன், சேலம் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மூணாங்கரடு சரவணன், அ.இ.தமிழர்தலைவர், சேலம் மாநகரச் செயலாளர் இராவண பூபதி, ப.க. மாவட்ட துணைச்செயலாளர் மோ.தங்கராஜ், இளைஞரணி மாவட்டத் தலைவர் பொறியாளர் ச.கார்த்திக், இளைஞரணி மாவட்டச் செயலாளர் துரை.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆத்தூர் விடுதலைசந்திரன் அவர்களின் “ மந்திரமா? தந்திரமா?” அறிவியல் விளக்க நிகழ்ச்சி இளஞ்சிறார்களை கவர்ந்திழுத்தது
பின்னர் அம்மாப்பேட்டை பகுதி தலைவர் குமாரதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேனாள் மாவட்டத்தலைவர் அ.ச.இளவழகன், மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி ஆகியோர் பொதுக்கூட்டத்தின் நோக்கவுரை ஆற்றினார்கள்.
சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ தலைமையுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலையாய அவா, சுயமரியாதையுடன் கூடிய, சமூகநீதி ஆட்சியை, திராவிடமாடல் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மீண்டும் 2026 –இல் அமர வைப்பதே, அதற்கான ஆயுத்த வேலைகளை இப்பொழுதே முன்னெடுப்போம் என்று அனைவரையும் விளித்தார்.
அரூர் மாவட்ட ப.க. தலைவரும் திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழுத் துணைச் செயலாளருமாகிய சா.ராஜேந்திரன் சுயமரியாதை இயக்கத்தின் விரிவாக்கமாக ஒன்றியக்கழகம் கிளைக்கழகம் தொடக்கியதை பாராட்டிப் பேசினார்.
கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன் சிறப்புரையில் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியான இன்றைய ஆட்சி தொடர்ந்திட வேண்டியதின் அவசியத்தை விளக்கினார்
முன்னதாக மாநில ஒருங்கிணைப் பாளர் ஊமை ஜெயராமன் அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய திராவிடர் கழகம், உடையாப்பட்டி கிளைக்கழகங்களைத் தொடங்கினார். நிர்வாகிகளை அறிவித்தார்.
அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய திராவிடர் கழகம்
தலைவர் – ப.கு.மாதேஷ்வரன்
செயலாளர் – அ.ராஜா
உடையாப்பட்டி கிளைக் கழகம்
தலைவர் – துரை.அஜித் குமார்
துணைத்தலைவர் – இரா.வெற்றிவேல்
செயலாளர் – சு.மா.இராமச்சந்திரன்
துணைச்செயலாளர் – அ.சிலம்பரசன்
அவர் தனது தொடக்கவுரையில், சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் தொடங்கப்பட்ட ஸனாதனச் சித்தாந்தம்(ஆர் எஸ் எஸ்) எப்படியெல்லாம் நம்மை பசப்பு வார்த்தைகளாலும் ஜாதி மத நம்பிக்கைகளையூட்டியும் மூளை மழுங்கச்செய்து இந்த சமுதாயத்தை முன்னேற்றப் பாதையிலிருந்து ஓரங்கட்டி வைத்தது என்பதையும், அதிலிருந்து தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைச் சிந்தனை, அதை ஏற்றுக்கொண்ட திராவிடர்கள் தமிழ்நாட்டினர் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியவர்களாக எப்படி இந்த ஆசியத் துணைக் கண்டத்தில் மிளிர்கிறார்கள் என்பதையும் அதற்கு காரணமாக திராவிடர்களின் ஆட்சி அமைந்தது என்பதையும் அதை வளர்த்தெடுத்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் புத்தியை ஏற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பாதுகாப்பில் இன்றைய திராவிட மாடல் ஆட்சி உள்ளது என்பதையும் இனியும் வரும் 50 ஆண்டுகளுக்கு சமூக நீதி ஆட்சி தொடர வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினார். அனைத்து தலைவர்களுக்கும் பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.
பெரியார் பற்றாளர்கள் கோகுலக் கண்ணன், தமிழ்ச் செல்வன், மூ.கோமதி, மே.சீதா, மூ.தமிழ்ச்செல்வன், மூ.கனிமொழி, பூவரசி, சந்தோஷ், உமா, தர்ஷினி, தனுசிறீ, கனிஷ்கா, வினோதினி, கவிதா, கோபிகா, சாலினி, இரா.கிருட்டினா, இரா.எட்வின், சே.வினோதினி, வழக்குரைஞர் இரா.செல்வகுமார், சா.செல்வகுமார், ம.கிருஷ்ணகுமார், சு.தமிழ்ச்செல்வம், தங்கவேல், சுப்ரமணி மற்றும் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக சேலம் மாவட்ட மகளிரணித் தலைவர் சுஜாதா தமிழ்ச்செல்வன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.