தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

8 Min Read

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு

புதுச்சேரி

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் திராவிடர் கழகம் சார்பில் 19-8-2025 அன்று மாலை வில்லியனூர், தென் கோபுர வீதியில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கி. அறிவழ கன் தலைமையில் மாவட்டச் செயலாளர் தி.இராசா வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு

முன்னதாக புதுச்சேரி மாவட்டத் திராவிடர் தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார் குழுவினர் மந்திரமா? தந்திரமா? என்கிற அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றும் மடாதிபதிகள், மந்திரவாதிகள் ஆகியோரின் முகத்திரையை கிழித்தெறிந்து, அனைத்தும் மந்திரம் இல்லை, தந்திரமே என்று நிருபித்துக்காட்டி அனைவரின் பலத்த கரவொலிக்கு இடையே நிகழ்ச்சியை செய்து காட்டினர்.

தொடர்ந்து துணைத் தலைவர் மு. குப்புசாமி, திண்டிவனம் கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு, கழகக் காப்பாளர் இர.இராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் ஆகியோர் உரையாற்றினர். புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி மறைந்த சுயமரியாதைச் சுடரொளி பெரம்பை கு.உலகநாதன் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அவரின் சிறப்புகள் பற்றியும் கழக செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி உரையாற்றினார்.

சிறப்பானது, மகிழ்ச்சியானது

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் செய்த சாதனைகளையும், செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் இன்றைக்கு சட்ட வடிவம் ஆக்கப்பட்டு நமக்குப் பயன்படுவது பற்றியும் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறினார். அத்துடன் தந்தை பெரியார் மறைந்த போது இத்துடன் இந்த இயக்கம் மறைந்துவிடும், அழிந்துவிடும் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் இந்த இயக்கம் கலைந்து போகாது, எந்த இயக்கத்துடனும் இணையாது, அப்படியே இருக்கும் என்று உறுதி கூறிய தமிழர் தலைவருடைய செயல்பாடுகளையும், இந்த இயக்கத்திற்கு, இந்த சமுதாயத்திற்கு அவர் ஆற்றிவரும் பணிகளையும் உலக அளவில் தந்தை பெரியார் தத்துவங்களை கொண்டு செல்லும் அவருடைய தனி ஆளுமையை பற்றியும், அவரது தலைமையிலே இன்றைக்கு நாங்கள் எல்லாம் செயல்படுவது ஒரு சிறப்பான, மகிழ்ச்சியான தருணம் எனக் கூறினார்.

தமிழ்நாடு

மேலும், புதுச்சேரியில் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாத பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினர் (EWS) இட ஒதுக்கீட்டை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தி புதுச்சேரி மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிற பா.ஜ.க மற்றும் என்.ஆர். கூட்டணி அரசு அகற்றப்பட வேண்டும். தற்பொழுது பாஜக வாக்குத் திருட்டில் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது. அந்த பாசிச ஆட்சி புதுச்சேரியில் அகற்றப்பட்டு திராவிட மாடல் அரசு புதுச்சேரியில் மலர வேண்டும், அதற்கு தேவையான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சிக்கு காப்பாளர் இரா.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, மகளிரணித் தலைவர் அ.எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பொறுப்பாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி, மு. ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், இராம.சேகர், தெ. தமிழ் நிலவன், இரா. ஆதிநாராயணன், கா.நா. முத்துவேல், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ. சிவராசன், பெ. ஆதிநாராயணன், கழக இளைஞரணித் தலைவர் ச. சித்தார்த், செயலாளர் ச. பிரபஞ்சன், திராவிட மாணவர் கழகத் தலைவர் பி. அறிவுச் ல்வன், செயலாளர் சபீர் முகமது, மறைந்த கு.உலகநாதன் மகன்கள் உ.அழகேசன், உ.சிவசங்கர், மகள் உ.வினோதா, அரசு ஊழியர் அய்க்கிய பேரவைத் தலைவர் மனித்.கோவிந்தராஜ், பழங்குடி மக்கள் நலச்சங்கத் தலைவர் ஏகாம்பரம், பிலால் ஓட்டல் உரிமையாளர் முகமது நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதி யாக வில்லியனூர் கொம்யூன் கழகச் செயலாளர் இரா. சுந்தர் நன்றி கூறினார்.

தமிழ்நாடு

பொன்னேரி

பொன்னேரி நகர கழக சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விளக்க பொதுக்கூட்டம், பொன்னேரி நகர தலைவர் வே.அருள் தலைமையில் நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றிய கழக தலைவர் ஏலியம்பேடு முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். பிறகு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் சுயமரியாதை இயக்கம் கடந்து வந்த பாதைகள் பற்றி விரிவாகப் பேசினார்.

நிறைவாக சிறப்புரை ஆற்றிய கழகத்தின் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி தொடர்ந்து மழைபெய்து கொண்டி ருந்தாலும் எங்களின் பிரச்சார மழை என்றைக்கும் நிற்க போவதில்லை என்ற அளவில் தொடர்ந்து பேசினார்,

அவர் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தின் மூலமாகத்தான் இந்த மண்ணில் சாதாரண கூலி விவசாயி மகன் அமெரிக்க, ஜெர்மன் போன்ற நாடுகளில் படிக்கவும், வேலை செய்யவும், , தொழில் தொடங்கவும் முடிகிறது, , அதேபோல பூ கட்டுகிற தொழிலில் உள்ள இந்த பெண்கள் அவர்களின் குழந்தையை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் படிக்க வைக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் தான் காரணம் என்று பல்வேறு இயக்க செயல்பாடுகளை பட்டியலிட்டார்.

இறுதியாக பொன்னேரி நகர இளைஞரணி தோழர் சுகன்ராஜ் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் தி.மு.கழக பொன்னேரி நகர் செயலாளர் ஜி.இரவிக்குமார், தி.மு.கழக வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன். திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் க.சூர்யா, கழக புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் புழல் சோமு, மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி, பொன்னேரி பகுதி தோழர்கள் அசோக்குமார், வெங்கடாசலபதி, எழில் மற்றும் இயக்க தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு-மாநில மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் 23.8.2025 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் நா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அனைவரையும் பெரியார் பிஞ்சு-ரிதன்யா பூபதிராஜா வரவேற்றார். முன்னிலையாக நகர திமுக செயலாளர் ப.சி. நாகராஜன், நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திமுக மா சுப்பிரமணியன், மாவட்ட கழக தலைவர் நற்குணன் மாவட்ட கழக செயலாளர் மணிமாறன், அசோக் குமார் – பவானி ஒன்றிய தலைவர்ஆகியோர் முன்னிலை வகித்தனர் .தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகம் தொடக்க உரையாற்றினார். கழகப் பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு 1925இல் தொடங்கி இன்று வரையிலும் திராவிடர் கழகம், திமுக அனைத்து திராவிட இயக்கங்களும் சிறப்பான முறையில் அதனை கொண்டாடிக் கொண்டு வருகின்றன, , மானமும் அறிவையும் தந்த அந்த சுயமரியாதை இயக்கத்தை நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம், பெண்களுக்கான உரிமை, கல்வி உரிமை.

அனைவருக்கும் பொதுவான சமத்துவ சமுதாயம் அமைக்க திராவிட இயக்கம் முழுமூச்சாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது அதன் விளக்க மாநாடு அக்டோபர் 4 அன்று செங்கற்பட்டில் நடைபெறவுள்ளது 92 வயதைக் கடந்தும் மக்களுக்கும், ஆட்சிக்கும் வழிகாட்டியாக இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அழைக்கின்றார்… வாருங்கள் என்று தமது உரையில்குறிப்பிட்டார்.

கூட்டத்திற்கு சிபிஅய் நகரச் செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்பவானி முக மது, ம.தி.மு.க.வைச் சேர்ந்த அறிவழகன், ஈஸ்வரமூர்த்தி, தி.மு.க. நெசவாளர் அணி சரவணன், திமுக மாவட்ட விளையாட்டு அணி விஜய் ஆனந்த் சந்தோஷ் குமார், நாமக்கல் மாவட்ட தலைவர் ஆ.குமார், சரவணன், கோபி மாவட்ட காப்பாளர் நா சிவலிங்கம், கோபி மாவட்டக் கழக செயலாளர் வெ. குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர்கள், வீ.தேவராஜ், பொன் முகிலன், ப.க. பாலசுப்பிரமணியம், ஆறுமுகம் ஈஸ்வரன், வி தேவராஜ், பூபதி ராஜா, பழனிச்சாமி, தமிழ்ச்செல்வன், காமராஜ் ராஜேஸ்வரி, சங்கீதாஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக ஒன்றிய தலைவர் அ. அசோக் குமார் நன்றி கூறினார். பவானி கடை வீதிகளில் கழகக் கொடி சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தது. ஏராளமான தோழர்கள், தோழமைக் கட்சியினர், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்திற்கு வருகை தந்து கருத்துரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

சீர்காழி

செங்கற்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 23-08-2025 அன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றிய கழக தலைவர் ச.சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஞான. வள்ளுவன், சீர்காழி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ. சட்டநாதன், நகர செயலாளர் கவிஞர் வெண்மணி அமைப்பாளர் செம்மலர் வீரசேனன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கு. இளமாறன் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட ப.க. தலைவர் இரெ. செல்லதுரை விவசாய விடுதலை முன்னணி தோழர் ரவி, தோழர் பெரியார் செல்வம் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன் சிறப்புரையாற்றினார்.

உரையாற்றிய தோழர்கள், “தமிழர்கள் மீது ஈராயிரம் ஆண்டுகளாக ஆரியம் தொடுத்து வரும் பண்பாட்டுப் படையெடுப்புகளால் மனுதர்மப்படியான ஆட்சியினை அந்நாளின் மன்னர்கள் நடத்தியதால் ஜாதி வேறுபாடுகள் தோன்றி கல்வி வேலை வாய்ப்பு உரிமைகள் பறிபோன வரலாற்றையும் அதற்காக பல காலகட்டங்களில் பலர் பாடுபட்டாலும் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஒன்றே நாடு முழுதும் மக்களிடையே தன்மான உணர்வினை ஊட்டி ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதையும், சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெரியாரால் நிறைவேற்றப்பட்ட சிறப்பான தீர்மானங்களே இன்றளவும் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சார்ந்த சமூகநீதித் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தனவாக இருக்கின்றன என்பதையும், இந்துத்துவா கொள்கை கொண்ட ஒன்றிய ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சியை தீரத்தோடும் சுயமரியாதையோடும் எதிர்த்துப்போராடி சமூக நீதி காக்கும் அரசாகத் திகழும் இன்றைய திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சிதான் வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான காரணங் களை எடுத்துரைத்தும்  சிறப்பாக உரையாற்றி யதைக் கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வத் தோடு கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் குத்தாலம் நகர தலைவர் சா. ஜெகதீசன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், மாவட்ட ப.க. தலைவர் இரெ.செல்லதுரை, மாவட்ட செயலாளர் தங்க.செல்வராஜ், கொள்ளிடம் ஒன்றிய ப.க. தலைவர் கோ. இளங்கோவன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி கடவாசல்  சா.ஆனந்தன், தங்க.நாகராசன், சீர்காழி இரா.பரசுராமன், திமுக தோழர்கள் ம.மச்சகாந்தன், வீரமணி,  ப.க. தோழர்கள் ஸ்டாலின், பிரபு, சுப்பு, பன்னீர்செல்வம் திமுக மாவட்ட பிரதிநிதி இரா. கமலநாதன், பெரியார் பிஞ்சுகள் செந்தமிழ், யாழ்மொழி, தமிழ்நிலவன், தமிழிசை, வெண்பா மற்றும் திராவிட இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சீர்காழி ஒன்றிய கழக செயலாளர் சா.செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *