பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனை தொடங்கியது

சென்னை, ஆக.20- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4இல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாது காப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சோதனைகள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO- Research Designs and Standards Organisation) மூலம் நடத்தப்படுகின்றன. மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறையின்படி, ஒன்றிய அரசாங்கத்தின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RDSO அமைப்பானது தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குகிறது.

ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப் பட்டுள்ளன, மேலும் அவை சுமார் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். இக்காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது.

சோதனை

அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் (verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது.

இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னி லையில் பாதுகாப்புச் சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், கூறியதாவது:-

இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது. பூவிருந்தவல்லி புறவழிச் சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ (viaduct Section 1A), 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நிலையான முன்னேற்றத்துடன், பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு சித்திக் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *