ஆண்டிமடம், ஆக. 18- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டம் 16.8 .2025சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் தலைமையேற்க, மாவட்ட துணைச்செயலாளர் க.கார்த்திக் வரவேற்புரையாற்றினார் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ. ராமகிருஷ்ணன் ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில், ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா. பாலமுருகன், நகரத் தலைவர் ந.சுந்தரம், நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, அமைப்பாளர் டைல்ஸ்பட்டுசாமி, நகரதுணைத் தலைவர் சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன், காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து கழக பேச்சாளர் கோவை வீரமணி சுயமரியாதை இயக்கம் தொடங்கியதன் காரணம் குறித்தும் ஆற்றிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் நன்றி கூறினார்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா.அசோகன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.கருணாநிதி , மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் எஸ்.எஸ்.திராவிடச் செல்வன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப. மதியழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ. ஜெயராமன் ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை. பிரபாகரன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், அரியலூர் ஒன்றிய செயலாளர் த. செந்தில், ஜெயங்கொண்டம் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன் கீழப் பழுவூர் அன்பரசன், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், ப.க. பொறுப்பாளர் இரா.ராஜேந்திரன், கவரப்பாளையம் ஜெய்சங்கர், மற்றும் தென்னூர் செல்வரங்கம், வழக்குரைஞர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்றனர்.