பெரியார் பெருந்தொண்டர் முடிகொண்டான் ப.ஜெகநாதன் படத்திறப்பு நினைவேந்தல்

1 Min Read

நன்னிலம், ஆக. 17- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் மேனாள் தலைவர் முடி கொண்டான் ப.செகநாதன் படத்திறப்பு  நினைவேந்தல் நிகழ்ச்சி ஜெகநாதன் இல்லத்தில் 12-08-2025 காலை 11 மணியளவில் நடைபெற்றது

நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் சு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ்,  நாகை மாவட்டத் துணைத் தலைவர்  பொன்.செல்வராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளர் க.வீரையன், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். குணசேகரன், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கலியமூர்த்தி, திமுக முன்னாள் பொதுக் குழு உறுப்பினர்  வெ. சந்திரமோகன், தமிழர் தன்மான பேரவை தமிழ் சு.ச.இராசன், நன்னிலம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் எஸ்.கரிகாலன், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், ஒன்றிய செயலா ளர் ஆசிரியர் சு. ஆறுமுகம், திருவாரூர் நகரத் தலைவர் கா. சிவராமன், நகர செயலாளர் ஆறுமுகம், திருவாரூர் ஒன்றிய தலை வர் கா.கதமன், ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கரன், ஒன்றிய துணை தலை வர் இராஜேந்திரன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் க.அசோக்ராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஆகியோர்கள் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றினார்கள் இவர் களுடன் செ. செந்தாமரை, ஜெகநாதன்,  (இணையர்) செ.அன்பழகன்,  செ.அறி வுச்செல்வன், செ.வீரமணி, (மகன்கள்) பிரியா, துர்கா, (மருமகள்)

ஜெகநாத், சரஸ்வதி, அட்சயா, ஹரீஷ், (பேரப் பிள்ளைகள்)  மற்றும் ஏராளமான கட்சியினர் ஊர் பொதுமக்கள் குடும்ப உறவுகள் கலந்துக்கொண்டு இறுதியாக ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து வீர வணக்கம் செலுத்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *