வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சந்திக்க தயார் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேட்டி!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக 15-–  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ 13.8.2025 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கோரிக்கை மனு

தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவினை தந்திருக்கிறோம். அந்த கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணை யத்தினுடைய அறிவிப்புப்படி பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்;

இரண்டாவதாக, தேர்தல் ஆணை யத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும்;

மூன்றவதாக, தேர்தல் ஆணையத் தால் நியமிக்கப் பட்டுள்ள பாக நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை முகவர்களையும் இணைந்து செயலாலற்ற நடைமுறைகளை வகுத்து தர வேண்டும்;

நான்காவதாக, வாக்குபதிவில் ஏற்பட்டு இருக்க கூடிய சில திருத்தங்கள் முறையற்றது, அந்த முறையற்ற சில திருத்தங்களை நீக்க வேண்டும்;

அய்ந்தாவதாக, எப்படி பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறதோ? அதைபோல் தமிழ்நாட்டிலும் நடக்க இருப்பதால், இங்கே ஆதார் எண்ணையும், குடும்ப அட்டை யும் ஒரு வாக்காளருடைய அடை யாளங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்டு இருந்தோம்.

இந்த அய்ந்தாவதாக உள்ளதைத் தவிர, மற்ற நான்கையும் உடனே பரிசீலித்து ஆவண செய்வதாக தேர்தல் ஆணையம் சொன்னது. ஆனால் இதுவரையில் அந்த வழியில் எந்த ஒரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

தீர்மானம்

எனவே இவற்றையெல்லாம் வலியுறுத்தி இன்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் நடக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நாடே பார்த்து கொண்டு இருக்கிறது. ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்கள்வாக்குரிமையை இழந்து நிற்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது. இந்தியா கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்க கூடிய திமுக, இந்த தேர்தல் ஆணையத்தின் செயலை எதிர்க்கும். எதிர்த்து போராடும்.

சட்டரீதியாக சந்திக்க தயார்

எனினும் கூட தமிழ்நாட்டில் அப்படி ஒரு சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே இங்கே அதுபோன்ற எந்த வாக்குகளையும் நீக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கடமை என்று நினைக்கிறோம். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *