உறுப்புக் கொடையால் இணைந்த குடும்பங்கள்

காந்திநகர், ஆக.12 உறுப்புக் கொடை மூலம் மகாராட்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு மத குடும்பங்கள் ரக்ஷா பந்தன் திருநாளில் பாசத்தால் பிணைந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மகாராட்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 15 வயது மாணவி அனம் தா அகமது, 2022 அக்டோபர் 30 அன்று உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 11,000 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பி தாக்கியதில் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவரது வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம் அவரது இடது கை காப்பாற்றப் பட்டாலும், இந்தச் சம்பவம் அனமை மனதளவிலும் உடலளவிலும் பாதித்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தின் வல்சாத் நகரில் வசித்து வந்த நான்காம் வகுப்பு மாணவி ரியா, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரியாவின் பெற்றோர் திருஷ்ணா மற்றும் பாபி மிஸ்திரி, மருத்துவர் உஷா மஷ்ரியின் வழிகாட்டுதலின் பேரில், தங்கள் மகளின் உடல் உறுப்புகளை கொடை செய்ய முன்வந்தனர். ‘டொனேட் லைஃப்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ரியாவின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், குடல், கண்கள் மற்றும் கைகள் கொடையாகப் பெறப்பட்டன.

கொடையாகப் பெறப்பட்ட ரியாவின் வலது கை, மும் பைக்குக் கொண்டு செல்லப் பட்டு, ஏற்ெகனவே ஒரு கையை இழந்திருந்த அனம் தா அகமதுவிற்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே தோள்பட்டை அளவில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் பெண் என்ற பெருமையை அனம் தா பெற்றார். உறுப்பு கொடையால் இணைந்த இரு குடும்பங்களின் சந்திப்பு, ரக்ஷா பந்தன் திருநாளில் வல்சாத் நகரில் உள்ள டிதால் கடற்கரையில் உணர்ச்சிப்பூர்வமாக நடை பெற்றது. மும்பையிலிருந்து வந்த அனம் தா அகமது, ரியாவின் சகோதரர் சிவமை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டு, அவரது மணிக்கட்டில் ராக்கி கயிற்றைக் கட்டி, பாசத்தைப் பிணைத்தார். இந்த நெகிழ்ச் சியான நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரையும் கவர்ந்தது.

 மாற்றம் தான் மாறாதது!

அய்.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக  காவல்துறை துணைத் தலைவராக இருந்த வருண் குமார், சிபிசிஅய்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு காவல்துறை தலைவராக ஜெயசிறீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட் கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *