புதுடில்லி, ஆக.11- பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அவர்களது விவரங்களை வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டுநிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், அவர்கள் நீக்கப்பட்ட தற்கான காரணத்தையும் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தது.
கடந்த 6-ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் , 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 9-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
பிரமாணப் பத்திரம்
அதை ஏற்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூடுதலாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள் ளது. அதில், தேர்தல் ஆணையம் கூறியிருப்ப தாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல் நீக்கப்படாது. அவர்களது கருத்துகளை தெரிவிக்க போதிய வாய்ப்பு அளிக் கப்படும். இதுதான் எங்கள் கொள்கை. இயற்கை நீதியை உறுதியுடன் பின்பற்று கிறோம்.
வாக்காளருக்கு உரிமை
இத்தகைய பாதுகாப்பு அம்சங் களுடன், வலிமையான இரண்டு அடுக்கு மேல்முறையீட்டு முறை உள்ளது. எனவே, எதிர்மறையான முடிவுக்கு எதிராக பரிகாரம் தேட ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிமை உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக பெயர் நீக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்குமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தகுதியான எந்த வாக்காளர் பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதற்காக இறுதிப் பட்டியலில் பெயர் நீக்கப்படும் என்று அர்த்தம் அல்ல.தற்போதைய வாக்காளர்களில் எத்தனை பேர் படிவங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர் என்பதைத்தான் வரைவு வாக்காளர் பட்டியல் காட்டுகிறது.
தவறு நடக்க வாய்ப்பு
இருப்பினும், மனிதர்கள் செய்யும் வேலை என்பதால், தெரியாமல் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான தவறு நடக்க வாய்ப்புள்ளது.வரைவு வாக்காளர் பட்டியல் , வெளியிடுவதற்கு முன்பே, வாக்குச்சாவடி வாரியாக எந்தெந்த வாக்காளர்களின் படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற விவ ரத்தை அரசியல் கட்சிகளிடம் பகிர தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தர விட்டுள்ளோம்.
ஆனால், மனுதாரர் பொய்யான தகவல்களை அளித்து தேர்தல் ஆணையத்தை களங்கப்படுத்தும் முந்தைய முயற்சிகளையே தொடர்ந்து வருகிறார். இத்தகைய முயற்சிகளை கடுமையாக அணுக வேண்டும். நீதிமன்றதை தவறாக வழிநடத்தும் அவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
விவரங்களை வெளியிட முடியாது
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயர்களை சேர்க்க வழியே இல்லை என்றும் மனுதாரர் பொய் பிரசாரம் செய்து வருகிறார். போதிய கால அவகாசத்துடன் அவர்கள் பெயர்களை சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர்கள் அடங்கிய தனி பட்டியலையோ, அவர்கள் பெயர் இல்லாததற்கான காரணத்தையோ வெளியிட சட்டத்தில் இடம் இல்லை. அத்தகைய பட்டியலை கேட்பது உரிமை கிடையாது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதில் இடம் பெறாதவர்களின் பட்டியல், ஏற்கனவே அரசியல் கட்சிகளிடம் அளிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.