அத்துமீறி கோயில் கருவறைக்குள் நுழைந்த இரண்டு பா.ஜ.க. பார்ப்பன எம்.பி.க்கள் மீது வழக்கு ஜார்க்கண்ட் அரசு அதிரடி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராஞ்சி, ஆக.10 ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவா்களில் நிஷிகாந்த் துபே அந்த மாநில தலைமைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர்மீது உரிமை மீறல் புகாரை மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவிடம் நேற்று (9.8.2025) அளித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக பாஜக பார்ப்பன எம்.பி.க்கள் இருவா் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சிராவண மாதத்தில் பாபா வைத்தியநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கியப் பிரமுகா்களுக்கான வழிபாட்டு நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி கோயில் கருவறைக்குள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை 8.8.2025 அன்று தெரிவித்தது.

இந்நிலையில், செய்தியாளா்க ளிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, ‘என் மீது மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் தலைமைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநர் தேவ்கா் காவல் துணை ஆணையா், கண்காணிப்பாளா் ஆகியோர் மீது இந்திய அரசமைப்புச் சட்டம் 105 பிரிவின் கீழ் உரிமை மீறல் புகாரை அளித்துள்ளேன். அந்தக் கோயிலின் அறக்கட்டளையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரான நான் உயா்ந்த பதவியில் இருக்கிறேன். என் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது? தேவ்கா் காவல் நிலையத்துக்கு நான் சென்றேன். என்னை கைது செய்ய காவல்துறையினர் மறுத்துவிட்டனா்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *