பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 “மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்” – பேச்சுப் போட்டி

2 Min Read

திருச்சி, ஆக.5- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 – கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 28.072025 முதல் 01.08.2025 வரை தொடர்ந்து அய்ந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றன.

இதன் துவக்கவிழா 28.07.2025 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் கலைப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.கற்பகம் குமர சுந்தரி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை மேனாள் பேராசிரியர் முனைவர் ஏ.லட்சுமி பிரபா கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

அவர் தமது உரையில், அறிவை வளர்க்கும் கலைகளுக்கும் வீரத்தை நிலைநாட்டும் விளையாட்டுகளுக்கும் தமிழினமே முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதனை பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கி, அத்தகைய சிறப்பினை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் இக்கலைச்சோலை 2025 போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

துணை முதல்வர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி, கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு விளையாட்டுப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கு.சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து “மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்”, “அனைவருக்கும் அனைத்தும்”, “92இல் 82 தமிழர் தலைவர்”, “என்று தணியும் இந்தப் பெண்ணியக் கொடுமைகள்”, “வாசிப்பின் மகிழ்ச்சி”, “மருந்தியல் துறை வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு”, “செயற்கை நுண்ணறிவும் நலவாழ்வும்”, “போதை ஒழிப்பு”, “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” போன்ற பல்வேறு தலைப்புக்களில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், மொழியில்லா நாடகம், பாடல், நடனம் மற்றும் நாட்டியம் போன்ற பல்வேறு போட்டிகள் மாணவர் களின் பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 30.072025 முதல் 01.08.2025 வரை மாணவர்களுக்கு கடி, கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டியெறிதல், ஓட்டம், தொடர் ஓட்டம், சதுரங்கம், கேரம் போன்ற பல்வேறு போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *