சேலம், ஜூலை 2- சேலம் மாவட்டத்தில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 27.7.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவரின் ‘மகிழ் இல்லத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தலைமை ஏற்று விடுதலை சந்தாக்களை பெருக்குவது குறித்தும், பெரியார் உலகம் அமைப்பதற்கான நிதி திரட்டுவது குறித்தும் உரையாற்றினார். சேலம் மாவட்ட ப. க. தலைவர் வழக்குரைஞர் சோ.அசோகன், ப.க. மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், மகளிர் பாசறை மாநில துணைச்செயலாளர் ப. காயத்ரி கருத்துரை ஆற்றினார்கள்.
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் பிறந்த நாள் விழாவினை மிகச் சிறப்பாக அனைத்து தோழர்களும் அவரவர்களின் வீட்டில் அறிவாசான் படத்தை திறந்து வைத்து அந்தந்த பகுதியில் திராவிடப் பெரு விழாவாக நடத்தவேண்டும்,
‘விடுதலை’ வாசகர்களை சந்தித்து நிறைவுற்ற சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை வாங்கியும், சேலம் மாவட்டம் முழுமையாக குறைந்தது 300 சந்தாக்களை சேர்த்து வழங்க வேண்டும்.
திருச்சி சிறுகனூரில் “பெரியார் உலகம்” பணி சிறப்பாக நிறைவடைய நிதி திரட்டுவதின் அவசியம் குறித்தும், அந்த நிதி திரட்டுவதென்பதை முதலில் தத்தம் வீடுகளிலிருந்து தொடங்கி பின் சுற்றத்தார், நண்பர்கள், கருத்தாளர்கள் என விரிவுபடுத்திட வேண்டும் என உரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு க.கமலம் பொதுக்குழு உறுப்பினர், அ.இ.தமிழர் தலைவர் மாவட்ட துணைச் செயலாளர், இராவண பூபதி மாநகரச் செயலாளர், பொறியாளர் சிவகுமார், மாவட்ட துணைத் தலைவர் ப.க., வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர் ப.க., மோ.தங்க ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ப.க., வழக்குரைஞர் கோ.கல்பனா, மாநகர செயலாளர் ப.க. முன்னிலை வகித்தனர்.
குமார் – அம்மாப்பேட்டை பகுதி கழகத் தலைவர், பழ. பரமசிவம் – சூரமங்கலம் பகுதி கழகத் தலைவர், மூணாங்காடு சரவணன் – தாதகாபட்டி பகுதி கழகத் தலைவர், சுஜாதா தமிழ்செல்வன்- மாவட்ட மகளிரணி தலைவர், வாசந்தி வீரமணி ராஜூ, வழக்குரைஞர் இரா.செல்வகுமார், ரவி, கிருஷ்ணசாமி, பொன்மதி, சம்பத், அழகரசன், அறிவழகன், தங்கராஜ், இந்திரஜித், லதா, பேபி லத்திகா, ஜகந்நாதன், சுப்பிரமணி, கந்தசாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர் ப.க. மாவட்ட அமைப்பாளர் தருமபுரி அன்பரசு பங்கேற்றார்.
தீர்மானங்கள்
தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை திராவிடக் குடும்பங்களின் திருவிழாவாக தோழர்கள் தமது வீடுகளில் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டா டுவது,
‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்தும் புதியன சேர்த்தும் 300 சந்தாக்களை ஆசிரியர் / பொதுச்செய லாளர் வீ.அன்புராஜுவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது
‘பெரியார் உலக மயம் உலகம் பெரியார்மயம்’ என்பதற்கான “பெரியார் உலகம்” திருச்சி சிறுகனூரில் அமை வதற்கான நிதி ரூ.10,00,000/- திரட்டி சென்னை சென்று ஆசிரியரிடம் கொடுப்பது என தீர்மானிக்கப்படடது.
ஆசிரியர் அவர்களின் அறிக்கை யின்படி 18.6.2025 அன்று சேலம் மாவட்ட கழக தலைவர் வீரமணி ராஜூ முதன்முதலாக ரூ.1,00,000/- (காசோலை) கொடுத்தார். அவர் மகன் வினோத் வீரமணி ராஜூ – பா. துர்காதேவி ரூ.1,00,000/- அவர் மகள் தரங்கிணி வீரமணி ராஜூ – ரா. ராம் மனோகர்
ரூ. 1,00,000/- ஆகியோர் காசோலை களை மாநில ஒருங்கணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில்
பெரியார் உலக நிதி வழங்க அறிவித்தவர்கள்
பெரியார் உலக நிதி வழங்க அறிவித்தவர்கள்
சேலம் மாவட்ட கழக துணைத்தலை வர் சு.இமயவரம்பன் – சி. பூங்கோதை ரூ.1,00,000/, சேலம் மாவட்ட கழக துணைச் செயலாளர் மூணாங்கரடு சரவணன் – ச. கோமதி ரூ.1,00,000/, சேலம் மாவட்ட ப. க. துணைத் தலைவர் பொறியாளர் சிவகுமார் – அமுதா ரூ. 25,000/, சேலம் மாவட்ட கழக செயலாளர் சி. பூபதி – கோமதி ரூ. 10,000/, சூரமங்கலம் பகுதி கழக தலைவர் பழ. பரமசிவம் – 5,000/, பொதுக் குழு உறுப்பினர் க. கமலம் – ரூ. 5000, பெரியார் பெருந்தொண்டர் பொன்மதி – ரூ.1,000/-, சேலம் மாவட்ட மகளிரணி தலைவர் சுஜாதா தமிழ்செல்வன் ரூ. 1,000/-, பெரியார் பற்றாளர் வழக்குரைஞர் செல்வகுமார் ரூ. 1000/-
புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவராக சு. இமயவரம்பன், சேலம் மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளராக – மூணாங்கரடு சரவணன் நியமிக்கப் பட்டனர்
லட்சுமி அம்மாள் (வயது 85) மாதேஷ்வரன் அயோத்தியா பட்டிணம் ஒன்றிய கழகத் தலைவரின் தாய்) 4.7.2025 அன்று இயற்கை எய்தினார்.
டி. ஃபமீதா, மருத்துவர் எஸ்.ஏ. சலீம் அஸ்தம்பட்டி பகுதி கழகத் தலைவரின் வாழ்விணையர் 20-7-2025 அன்று இயற்கை எய்தியதற்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
இராவண பூபதி சேலம் மாநகர செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.