புதுடில்லி, ஆக.2 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம் சேர்க்கும் சுதந்தி ரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்று மையையும் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை கட்டுப்படுத்து வதற்கு இந்திய அரசு முடிவெடுத்தது.
இதன் அடிப்படையில், 1967ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. “உபா UAPA (Unlawful Activities (Prevention Act) என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் “எது தீவிரவாத நடவடிக்கை” என்பதற்கு குறிப்பான விளக்கம் அளிக்கப்படவில்லை என் றாலும், பிரிவு 35இன்படி ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
இந்த சட்டத்தின் பிரிவு 35அய், தங்கள் அரசுக்கு எதிராக பேசு பவர்கள், முஸ்லிம் மக்களை ஒடுக்க மோடி அரசு படுமோசமாகப் பயன் படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் உபா சட்டத்தின் கீழ் 6,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 3.8% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாகவும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,“2018-2022 காலகட்டத்தில் உபா (UAPA) சட்டத்தின் கீழ் 6,503 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர்களில் 252 பேருக்கு (3.8%) மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தரவு தேசிய குற்ற பதிவு மய்யம் (NCRB)-இன் “இந்தியாவில் குற்றம்” என்ற அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது” என அதில் கூறப்பட் டுள்ளது.
இந்த அறிக்கை மூலம் உபா சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன.