சண்டிகர், ஜூலை 31 அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மேனாள் அரியானா அய்ஏஎஸ் அதிகாரியின் மகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் பராலாவை, அரியானா அட்வகேட் ஜெனரல் (AG) அலுவலகத்தில் உதவி அட்வகேட் ஜெனரலாக நிய மித்துள்ளது.
இந்த நியமனம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள துடன், பாஜகவின் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” (பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தை களுக்குக் கல்வி அளிப்போம்) என்ற முழக்கத்திற்கு முரண் பாடாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
விகாஸ் பராலாவின் நியமனத்தைப் பரிந்துரைத்த வர்களில், உள்துறை சிறப்புச் செயலாளர் மணி ராம் ஷர்மா, சட்ட ஆலோசகர் ரிது கார்க் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளான தர்ஷன் சிங் மற்றும் எச்.எஸ். பல்லா ஆகியோர் அடங்குவர். அரியானா பாஜகவின் மேனாள் தலை வரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுபாஷ் பராலாவின் மகனான விகாஸ், சட்டம்படித்து வழக் குரைஞராகி நீதிமன்றங்களில் ஆஜராகி வருகிறார்.
கடந்த 05.08.2017 அன்று, விகாஸும் அவரது நண்பர் ஆஷிஷும் கல்லூரிக்குச் சென்று கொண்டு இருந்த அரியானா அய்ஏஎஸ் அதிகாரியின் மகளின் காரைப் பின்தொடர்ந்தனர்.. சிலர் காரைப் பின் தொடர்வதைப் பார்த்து அச்சமுற்ற இளம்பெண் அரியானா காவல்துறைக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே, காரை வழிமறித்த விகாஸும் அவரது நண்பரும் இளம்பெண்ணைக் கடத்த முயன்றபோது காவல்துறை அங்கு வந்து அவர்களைக் கைது செய்தது. பின்னர் அய்பிசி 354D (பின்தொடர்தல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விகாஸின் தந்தை சுபாஷ் பராலா அரியானா பாஜக தலைவராக இருந்தார்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நியமனம்
ஏற்ெகனவே விகாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், சண்டி கரில் உள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திலும், டில்லி யிலும் மாநிலத்தைப் பிரதி நிதித்துவப்படுத்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், மூத்த துணை அட்வகேட் ஜெனரல், துணை அட்வகேட் ஜெனரல் மற்றும் உதவி அட்வகேட் ஜெனரல் ஆகிய தரவரிசைகளில் உள்ள 7 முக்கிய வழக்கறிஞர்களில் இவரும் ஒருவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
விகாஸுக்கு எதிரான பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றவியல் வழக்கு சண்டிகர் நீதிமன் றத்தில் நடந்து வருகிறது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ளது. தற்போது விசாரணைக்கான சான்றுகள் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. மாநிலத்தின் மூத்த அய்ஏஎஸ் அதிகாரியின் மகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற குற்றவாளிக்கு மாநிலத்தின் மிகவும் உயரிய பதவியைத் தந்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இது, பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிவரும் பாஜகவின் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற முழக்கத் திற்கு முரண்பாடாக இருப்பதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் நீதி மீதான நம்பிக்கையை சிதைப்ப தாகப் பலர் கருத்து தெரிவித்துள் ளனர்.