அகமதாபாத், ஜூலை 27 தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்வி களுக்கு காரணம் என ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி யுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடுங்கள்.சட்டமன்றத் தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும்.
கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும் போது நீங்களே உங்களை சந்தேகிக்கலாம். அப் போது நீங்கள் அவுட் ஆவது உங்கள் தவறல்ல, மாறாக நடுவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதே காரணம் என்பதை கண்டறியலாம்.அதைப்போலவே இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைப்பட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்து வருகிறது. அதை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் கட்டுப்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் காரணமாகவே 2017-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம்.இந்த நாடு ஒரு கோவில் போல. அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம். ஆனால் “பிரசாதம்” என்று யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.