சென்னை, ஜூலை 26- ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி (UPSC), அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிகளுக்கு மொத்தம் 230 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு மாதம் ரூ. 1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
பணியிடங்களின் விவரம்: அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: 156 பணியிடங்கள் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: 74 பணியிடங்கள் மொத்தம்: 230 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்.
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: இளங்கலை பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும். கம்பெனி சட்டம் / தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு (18.08.2025 நிலவரப்படி): அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்புத் தளர்வுகள்: எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள். அரசு விதிகளின்படி மற்ற பிரிவினருக்கும் தளர்வுகள் உண்டு.
ஊதிய விவரம்: அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: மாதம் ரூ. 47,600 ₹1,51,100 வரை. உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: மாதம் ₹56,100 ₹1,77,500 வரை.
தேர்வு முறை: போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. (பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை). விண்ணப்ப அவகாசம் தொடங்கும் நாள்: 29.07.2025 விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2025
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகு, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.