இஸ்லாமாபாத், ஜூலை 24- இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து, பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் மேரியட் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தான் பிரிட்டன் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
“பாகிஸ்தான் – இந்தியா மோதலின்போது பதட்டங்களைத் தணிப்பதில் பிரிட்டனின் செயல்பாட்டுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது