திருத்தணி, ஜூலை 22- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஜேபிஆர் மனி மகாலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் நோக்க உரையுடன் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி வரவேற்புரை வழங்கினர். கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.ரமேஷ்,ஆசிரியர் எழில்,க.ஏமோகனவேலு,நகர செயலாளர் வாகையூரான்,ஸ்டாலின்,க.ஏ.மோகனவேலு,சி.நி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகரில் வரும் 04-10-2025 சனிக்கிழமை நடைபெறும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா ஒருநாள் மாநாடு தமிழர் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கும் மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது, தங்கள் பொருளாதார பங்களிப்பு பற்றி கலந்துரையாடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்துப் பொறுப்பாளர்களும் மகளிரணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்கள் .முடிவில் பொதட்டூர் திராவிடமணி நன்றி கூறினார். ஏராளமான தோழர்கள், தோழியர்கள், மாநாடு நடைபெறும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பியன், செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆ.ப.கருணாகரன், சுந்தரம் ஆகியோரும் பங்கேற்றனர்.திருத்தணி நகர செயலாளராக வாகையூரன் நியமிக்கபட்டார்.