தாக்கா, ஜூலை 22- வங்கதேசத்தின் காக்கஸ் பஜார் பகுதியில் உள்ள ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் திருட முயன்ற ஒருவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘பவர்’ உடற்பயிற்சிக் கூடத்திற்குள் நுழைந்து பொருட்களைத் திருட முயன்ற அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைக்காமல், உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் அவருக்கு ஒரு நூதன தண்டனையை வழங்கினார் என ‘பாங்காக் போஸ்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருட வந்தவருக்கு நல்ல உடல்வாகுவாக இருந்ததால், அவரைத் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வைத்தார்.
அந்த நபர் மிகவும் களைப்படைந்து தன்னை விட்டு விடுங்கள் என்று கூறிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு கட்டத்தில் கண்ணீருடன் தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சுவதும் காணொலியில் பதிவாகியுள்ளது. வன்முறை இல்லாமல் இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட உரிமையாளரை ஒரு சிலர் பாராட்டியுள்ளனர்.