புதுடில்லி, ஜூலை 18 – கீழடி அகழாய்வு அறிக்கையின் உண்மையைமூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கை
தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு களில் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன.
இந்த ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், தங்கள் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அறிவியல் பூர்வமாக இல்லை எனக்கூறி இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ‘‘The Times of India’’ ஆங்கில நாளி தழுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அதில், தனது 982 பக்க ஆய்வ றிக்கையை குறிப்பிடப்பட்டுள்ள உண்மையை மூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி யுள்ளார்.
உண்மையை மாற்றமுடியாது
ஒன்றிய அரசு தனது ஆய்வ றிக்கையை திருத்தம் செய்யுமாறு கூறியது குறித்து கேள்விக்கு தனது ஆய்வறிக்கையில் எதாவது எழுத்து பிழைகள் இருந்தால், அதை சரிசெய்ய முடியும் ஆனால், ஆய்வறிக்கையில் உள்ள உண்மையை மாற்றினால் தாம் குற்றவாளியாகிவிடுவேன் என்று கூறினார்.
கீழடியில் தனது தலைமையி லான குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சிநிறுவனம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ள தால், கண்டு பிடிப்புகளை மாற்றங்கள் செய்ய முடியாது என ஒன்றிய அரசிடம் தெளிவாக தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.
கீழடி அறிக்கையை அறிவியல்பூர்வ மாக நிரூபணம் செய்யவில்லை என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, முதலில் அவர் ஆய்வறிக்கையை படித்துவிட்டு பேசவேண்டும் என்று கூறினார்.
கீழடி அகழாய்வு அறிக்கையை நீர்த்துப்போகும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமர்நாத் ராம கிருஷ்ணா, தமிழர்களின் பன்மு கத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை நாட்டு மக்க ளுக்கு தெரியபடுத்தவேண்டும் என்ப தற்காகவே ஆய்வறிக்கை வெளி யிடப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால், அகழாய்வு குறித்து எதுவுமே தெரியாத சிறீராமன் என்பவர் அளித்த ஆய்வறிக்கையை உண்மை என நம்பும் ஒன்றியஅரசுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணாகண்டனம் தெரிவித்தார்.
மவுரியா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட வடமாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆய்வுகளை ஏற்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ராமகிருஷ்ணன், இந்தியாவின் கலாச்சாரம் என்பது பன்முகத்தன்மை கொண்டது என்பதால், இது குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.