‘அகமதாபாத் விமான விபத்து’ முதற்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம் தாக்கல்

2 Min Read

புதுடெல்லி, ஜூலை 9- அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. போயிங்ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் அங்குள்ள ஒரு மருத்துவக்கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பிடித்தது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த குஜராத் மாநில மேனாள் முதலமைச்சர் விஜயரூபானி உள்ளிட்ட 242 பேரில் 241 பேர் பலியானார்கள். ஒரே ஒருவர் மட்டும்  உயிர் பிழைத்தார். இதைப் போல விடுதிக் கட்டடத்தில் இருந்த மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக் கப்பட்டது. இதில் இந்திய விமானப்படை, இந் துஸ்தான் ஏரோநாட்டிக் கல், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த நிபுணர்கள் குழு, விமானத்தின் கருப் புப்பெட்டி தரவுகளையும் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுப்பணிகளை விமான விபத்து புலனாய்வுப்பிரிவு கண்காணித்து வருகிறது.

கருப்புப் பெட்டிகள் மீட்பு

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஒரு கருப்புப்பெட்டியும், 16-ஆம் தேதி மற்றொரு கருப்புப் பெட்டியும் மீட் கப்பட்டன. இவை பகுப் பாய்வுக்காக டில்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அதில் உள்ள குரல் பதிவு உள்ளிட்ட பதிவுகளை நிபுணர்கள் பதிவிறக்கம் செய்து, ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு பார்த்தனர்.

விமானத்தின் கருப் புப் பெட்டி பதிவுகளை பகுப்பாய்வு செய்யும் வசதிகள் முன்பு இந்தியா வில் இல்லை. இதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது டில்லியில் அந்த வசதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அகமதாபாத் விமானத்தின் கருப்புப்பெட்டிகள் இங்கு நவீன முறையில் ஆய்வு செய்யப்பட்டன.

சமர்ப்பிப்பு

இந்த ஆய்வுகளை தொடர்ந்து விபத்தின் முதல்கட்ட விசா ரணை அறிக்கை தயா ரிக்கப்பட்டது. இதனை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும், சம்பந்தப்பட்ட உயர் அதி காரிகளிடமும் சமர்ப்பித்து உள்ளனர். மேல் விசா ரணை தொடர்ந்து வருகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *