இந்தியாவின் வங்கித் துறையில் நடைபெற்ற அனில் அம்பானி – மோடி அரசின் மிகப் பெரிய நிதி மோசடி ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ கடனாக அளித்த ரூ.49,000 கோடி சூறை!

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூலை 7- ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் கடன் கணக்கை மோசடி வழக்காக ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ அறிவித்துள்ளது. ஆனால், ரூ. 48 ஆயிரத்து 545 கோடி அளவிற்கான மக்கள் பணம் சூறையாடப்பட்ட பிறகே இந்த தாமதமான நடவடிக்கை வந்துள்ளது. இது இந்தியாவின் வங்கித் துறையில் நடைபெற்ற மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகும். வங்கித்துறையின் கொள்கை முடிவுகளின் மூலம் பெரும் தொழி லதிபர்கள் பொதுப் பணத்தை அப கரித்துள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட பொது நிதிக் கொள்ளை!

அனில் அம்பானியின் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடத்திய இந்த நிதி மோசடி, வெறும் தவறான கணக்கெடுப்பு அல்ல – இது திட்டமிட்ட கொள்ளையாகும். 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய இந்த மோசடியில், இந்நிறுவனம் 53 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ. 49 ஆயிரம் கோடி கடன் பெற்று, பின்னர் அதில் வெறும் ரூ. 455 கோடியை மட்டுமே திருப்பிக் கொடுத்து விட்டு தப்பித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு 100 ரூபாய் கடனுக்கும், வெறும் ஒரு ரூபாயை மட்டுமே கொடுத்துவிட்டு மீதியை சூறையாடிவிட்டார்கள். இந்த அளவிலான நிதி மோசடி இந்திய வரலாற்றிலேயே அரிதானது. இது வெறும் “தொழில் முறை தோல்வி” அல்ல, மாறாக முன்கூட்டியே திட்ட மிட்டு நடத்தப்பட்ட பொது நிதிக் கொள்ளையாகும். அனில் அம்பானி போன்ற செல்வந்தர்கள் எவ்வாறு அரசியல் செல்வாக்கையும், ஊழலையும் பயன்படுத்தி மக்களின் பணத்தைத் திருடுகிறார்கள் என்ப தற்கு இது ஒரு அதிர்ச்சியூட்டும் உதாரணமாகும்.

மோடி அரசின் அனுமதியில் நடந்த மிகப்பெரிய மோசடி

இந்த பெரிய அளவிலான மோசடியின் மிக அதிர்ச்சியூட்டும் பகுதி என்னவென்றால், மோடி அரசாங்கம் இந்த சர்ச்சைக்குரிய தீர்வுக்கு அனுமதி அளித்ததாகும். ரூ. 49 ஆயிரம் கோடி கடனை, வெறும் 455 கோடி ரூபாயைக் கொடுத்து கணக்கு முடிக்குமாறு அனுமதித்த கொள்கை முடிவு, பொது நிதியின் பாதுகாப்பில் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த அரசாங்கம் ஒருபுறம் ஏழைகளிட மிருந்து பெட்ரோல், எரிவாயு, உண வுப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலித்துக் கொண்டே, மறுபுறம் அம்பானி போன்ற பில்லி யனர்களுக்கு ரூ. 48 ஆயிரத்து 545 கோடி பணத்தை இலவசமாக கொடுத்துள்ளது. இது நாட்டின் ஏழை மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்கும் வர்க்க யுத்தமாகும்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் கூட்டுச்சதி!

இந்த மோசடியில் பொதுத்துறை வங்கிகள் வெறும் பாதிக்கப்பட்ட வர்கள் அல்ல – அவை இந்த திருட்டில் கூட்டாளிகளாக செயல் பட்டுள்ளன. எந்த உறுதியான பாதுகாப்பும் இல்லாமல், சரியான விசாரணையும் இல்லாமல், ரூ. 49 ஆயிரம் கோடி போன்ற பெரும் தொகையை ஒரு நிறுவனத்திற்கு எவ்வாறு கடனாக கொடுக்க முடியும்? இது வெறும் அலட்சியம் அல்ல – இது திட்டமிட்ட சதியாகும். வங்கி அதி காரிகள் மற்றும் அனில் அம்பானி இடையே இருந்த  ஊழல் உறவுகள் ஆராயப்பட வேண்டும். எந்த சாதாரண மனித னும் ரூ. 10 லட்சம் கடனுக்கு கூட எண்ணற்ற ஆவணங்களையும் உத்தரவாதங்களையும் கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால், அம்பானி போன்றவர்கள் ரூ.49  ஆயிரம் கோடியை வெறும் கையெழுத்தில் எடுத்துக்கொண்டு போகிறார்கள். இது அதிகாரத்தில் உள்ளவர்களின் கூட்டுச்சதியின் வெளிப்பாடாகும்.

சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை,
சிறையில் அடைக்கப்படவில்லை

இந்த மோசடியானது, மோசடி என அறிவிக்கப்படுவதற்கே 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2025 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் அனில் அம்பானி சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தார், அவ ரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை, அவர் சிறை யில் அடைக்கப்படவில்லை. மாறாக அரசாங்கம் அவருக்கு ரூ. 48 ஆயிரத்து 545 கோடி பணத்தை இலவச பரிசாகக் கொடுத்துவிட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *