புதுடில்லி, ஜூலை 6– வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்வது மோச மான நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பீகார் உள்பட சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளமாநி லங்களில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையர் தீவிர சிறப்பு திருத்தம் செய்து வரு கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரை 3.7.2025 அன்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது இந்த சிறப்பு திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், வாக்காளர் பட்டி யலில் தகுதியுள்ள அனைத்து குடிமக்களையும் சேர்க்கும் வகையிலும், தகுதியற்றவர்களை நீக்கும் வகையிலும் திட்டமிடப் பட்ட முறையில் மற்றும் படிப்படியாக இந்தப் பயிற்சி நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையர்தெரிவித்தது.
அதேநேரம் இந்த நடவடிக் கையில் எதிர்க்கட்சிகளின் அச் சத்தை போக்க, ஒட்டுமொத்த நட வடிக்கையையும் ஆய்வு செய்து வருவதாகவும் தேர்தல் ஆணையர் கூறியது.
வாக்குரிமையை பறிக்கும்
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மோசமான நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. இது தொடர்பாக்கட் சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கு தீமையை கொடுப்பதில் இந்த அரசு நிபுணத்துவம் பெற்றுள்ளது. வாக் காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது லட்சக்கணக்கானோரின் வாக்குரிமையை பறிக்கும் மோச மான நடவடிக்கை.
இந்த விவகாரத்தில் தேவை யற்ற அவசரமும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய முழுமையாக மறுப்பதும் பீகாரில் தேர்தல் முறையை அழிக் கும் ஒரு தெளிவான முயற்சி என்பதை காட்டுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த அபத்தமான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும், இவ்வாறு கே.சி.வேணு கோபால் கூறினார்.