பொத்தனூர், ஜூலை 4- பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர், பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா 2.7.2025 அன்று பொத்தனூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தோழர்கள் தந்தை பெரியார் படிப்பகத்திற்கு வருகை தந்து மாலை அணிவித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மேட்டூர் மாவட்ட கழக காப்பாளர் பழனிபுள்ளையண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகம், மேட்டூர் மாவட்ட கழகத்தின் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், நாமக்கல் மாவட்ட கழக தலைவர் ஆ.கு குமார், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜூ, ஈரோடு மாவட்டத் தலைவர் நற்குணம் ஆத்தூர் மாவட்டத் தலைவர் அ.சுரேஸ் குமார், சேலம் மாவட்ட துணைச் செயலாளர், தமிழர் தலைவர், அ.ச.இளவழகன், வழக்கு ரைஞர் குயில்மொழி, மேட்டூர் பெ. சவுந்தர்ராஜன், வழக்குரைஞர் வை.பெரியசாமி, சு.சரவணன், சீனிவாசன், பொன்னுசாமி, கே.எஸ்.அசேன், வீரமுருகன், சுரேஷ், இல.ப. செல்வகுமார், எம்.சாகுல் முஸ்தபா, மு. செங்கோடன், சா.அன்புமணி, நடராஜ், கே.ஆர்.பாலு, கே.ஆர்.ராஜேந்திரன், மற்றும் பல்வேறு அரசியல் இயக்கப் பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.