நல்ல முடிவு – தொடரட்டும்! ‘‘இந்தியா கூட்டணியில் மஜ்லிஸ்’’ ஒவைசி சொன்ன வார்த்தை! ‘‘இனி முஸ்லீம் வாக்குகள் பிரியாது!’’

viduthalai
3 Min Read

பாட்னா, ஜூலை 1 இத்தனை காலம் பல்வேறு மாநிலச் சட்டப்பேர வைத்  தேர்தல்களில் ஒவைசி தனித்தே போட்டியிட்டார். இருப்பி னும், அவர் வாக்குகளைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்தச் சூழலில் தான் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியில் சேர ரெடியாக இருப்பதாக ஒவைசி தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் மிகப் பெரிய முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷின் ஜேடியு மற்றும் பாஜக இணைந்தே தேர்த லைச் சந்திக்கவுள்ளது. மறுபுறம் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளாக உள்ளன

பீகார் தேர்தல்

இந்த முறை பீகார் தேர்தல் முக்கியமானதாக இருக்கும். இதனால் இப்போதே அங்குத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே பீகாரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணியை அணுகி யுள்ளதாக அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

இது தொடர்பாகக் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாபந்தன் கூட்டணியின் தலைவர்களை, தங்கள் கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் அணுகியுள்ளதாக அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.. மேலும், வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட மஜ்லீஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒவைசி கூறினார்.

கூட்டணிக்குத் தயார்

இது தொடர்பாக ஏஎன்அய் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒவைசி, ‘‘எங்கள் மாநிலத் தலைவர் அக்தருல் இமான், மகாபந்தன் கூட்ட ணியின் சில தலைவர்களிடம் பேசியுள்ளார். பீகாரில் பாஜக அல்லது என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை அவர் திட்ட வட்டமாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைக் கூறிவிட்டோம்.. இனி மற்ற அரசியல் கட்சிகளின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்று கூறினார்.

பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் மஜ்லீஸ் கட்சிக்கு வலுவான செல்வாக்கு உள்ளது. இருப்பினும், 2022ல் அக்கட்சியின் அய்ந்து
எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியில் இணைந்தனர். இது மஜ்லீஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடை வாகப் பார்க்கப்பட்டது.

ஒவைசி அதிரடி

இது குறித்து ஒவைசி கூறுகை யில், ‘‘சீமாஞ்சல் மட்டுமல்லாமல், பிற பகுதிகளிலும் மஜ்லீஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். மகாபந்தன் கூட்டணியில் எங்களைச் சேர்க்கத் தயாராக இல்லை என்றால், நான் எல்லா இடங்களிலும் போட்டி யிடத் தயாராக இருக்கிறேன். சரி யான நேரம் வரும் வரை காத்தி ருங்கள். எவ்வளவு சீட்களில் போட்டி யிடுவோம் என்பதை அறிவிக்க இது சரியான நேரம் கிடையாது’’ என்றார்.

ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி தெலங்கானா தலைநகர் அய்த ராபாத்தில் பல காலமாகவே செல்வாக்குடன் இருக்கிறது. கடந்த 1989 முதலே மஜ்லீஸ் கட்சியே அய்த ராபாத் மக்களவைத்  தொகுதியைத் தன்வசம் வைத்திருக்கிறது. 1999 வரை ஒவைசி தந்தை சுல்தான் ஒவைசி அங்கு எம்பியாக இருந்தார். 2004 முதல் ஒவைசி எம்பியாக இருக்கிறார்.

ஏன் முக்கியம்

இருப்பினும், கடந்த சில ஆண்டு களாக ஒவைசி தெலங்கா னாவைத் தாண்டிப் பல மாநில தேர்தல்களில் போட்டியிட்டு கட்சியை வலுப்படுத்தப் பார்த்தார். அவர் தனித்துப் போட்டியிட்ட நிலையில், வாக்குகள் பிரிந்தன. இதனால் பல தேர்தல்களில் அது எதிர்க்கட்சிகள் தோல்விக்குக் காரணமாக இருந்தது. இதனால் அவரை ‘பாஜக பி டீம்’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் அவரே முன்வந்து எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டியுள்ளார். இது தேசிய அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும்!

பீகார் தேர்தலில்  எதிர்க்கட்சிக ளுடன் ஒவைசி கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால், அது மற்ற மாநிலங்களிலும் தொடரலாம். அது தேசிய அரசியலிலும் எதிரொ லிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *