புதுடில்லி, ஜூலை 1 வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதி லிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே தட்கல் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
பான் கார்டு, தட்கல் பயணச் சீட்டுகளுக்கு ஆதார் கட்டாயம்
மத்திய நேரடி வரி வாரி யத்தின் (CBDT) விதிகளின்படி, செவ்வாய்க் கிழமை முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இதுவரை, ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அடையாள அட்டை களுடன் பான் கார்டைப் பெறுவது சாத்தியமாக இருந்தது.
ஏற்கெனவே பான் கார்டு வைத்தி ருப்பவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று CBDT கூறியுள்ளது. இந்த விதியைப் பின்பற்றாதவர்கள் தங்கள் பான் கார்டுகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது.
இதேபோல், ரயில்வே தட்கல் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் கூட ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கும். இதனுடன், ஜூலை 15 முதல் இணையத்தில் அல்லது கவுண்டரில் வாங்கப்படும் அனைத்து ரயில் பயண சீட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் அறி முகப்படுத்தப்படும்.
இதன் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப் படும். மறுபுறம், ரயில் பயணச் சீட்டு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை
வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31 முதல் செப்டம்பர் 15 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இது ஊழியர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுத லாக 46 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.
வங்கி மாற்றங்கள்
முன்னணி வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தி வருகின்றன.
SBI வங்கி அதன் எலைட், மைல்ஸ் எலைட் மற்றும் மைல்ஸ் பிரைம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளுடன் வாங்கப்பட்ட விமான பயணச் சீட்டுகளில் வழங்கப்படும் விமான விபத்து காப்பீட்டு வசதியை நிறுத்துகிறது.
மாதாந்திர பில்களில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை (MAD) கணக்கிடும் முறையிலும் இது மாற்றங்களைக் கொண்டுவரும்.
HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் சில பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1, 2025 முதல், வாடகை, ரூ.10,000-க்கு மேல் இணைய விளை யாட்டு மற்றும் ரூ.50,000-க்கு மேல் மாத பயன்பாட்டு பில்களுக்கு 1% பரிவர்த்தனை கட்டணம் (அதிகபட்சம் ரூ.4,999) வசூலிக்கப்படும். மேலும், ரூ.10,000-க்கு மேல் டிஜிட்டல் வாலட்டில் பணம் சேர்த்தாலும் இதே கட்டணம் பொருந்தும்.
அய்சிஅய்சிஅய் வங்கியின் ஏடிஎம் பரிவர்த்தனைகள் சேவை கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அய்சிஅய்சிஅய் வங்கி ஏடிஎம்க ளில் முதல் அய்ந்து ஏடிஎம்களுக்கு பணம் இலவசம். அதன் பிறகு பணத்தை எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.
அய்சிஅய்சிஅய் வங்கி அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களுக்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அய்ந்து பரிவர்த்தனைகளும் செய்ய லாம். இதற்கு மேல் நீங்கள் ஒரு பரி வர்த்தனைக்கு முறையே ரூ.23 மற்றும் ரூ.8.5 செலுத்த வேண்டும்.