புதுடில்லி, ஜூன்.26- கடந்த ஆண்டு நடந்த மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந் தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (25.6.2025) டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஒன்றிய அரசின் கைப்பாவை
மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகுல்காந்தி புள்ளிவிவரங்களுடன் உண்மைகளை முன்வைத்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசின் கைப்பாவை ஆகிவிட்டது. நம்மை மகிழ்விப்ப தற்கான காரியங்களை செய்யும் கைப்பாவை போலாகி விட்டது. உங்களிடம் (பிரதமர் மோடி) கைப்பாவை இருக் கிறது. அதனால் நீங்கள் வெற்றி பெறுவதாக கூறுகிறீர்கள்.
மராட்டிய மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நாங் கள் வெற்றி பெற்றோம். அதே மாநிலத்தில் 5 மாதங்கள் கழித்து நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்காளர் எண் ணிக்கையில் பெரும் மாறுதல் காணப்பட்டது. வழக்க மாக, 5 ஆண்டுகளில், வாக்காளர் எண்ணிக்கை 2 அல்லது 3 சதவீதம் அதிகரிக்கும். ஆனால், அங்கு 5 மாதங்களில் 8 சதவீதம் அதிகரித்தது என்றார் அவர்.