காரைக்குடி, ஜூன் 25 ஜூன் 22 ஞாயிறு காலை காரைக்குடி நேசனல் கேட்டரிங் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் வைகறை, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கொறட்டி வீ.பாலு வர வேற்புரை ஆற்றினார்.
செல்வம் முடியரசன் தலைமை உரையில், அறிவை விரிவு செய்யும் சமூகத்திற்கு தேவையான செய்திகளை மட்டுமே 91 ஆண்டுகளாக தாங்கி வெளிவரும் ஏடு விடுதலை, அந்த ஏட்டை உயிர்ப்போடு, உலகெங்கும் கொண்டு சேர்க்கும் 92 வயதில் வீர நடை போடும் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் என புகழாரம் சூட்டினார்.
பேராசிரியர் முனைவர் செ. கோபால்சாமி தனது தொடக்க உரையில், நம்மிடையே மொழி, இனம்,ஜாதி என்கிற எந்த பாகுபாடும் இல்லை, நாம் படிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் நாம் படிப்பதை பகிர்வதன் மூலம் புதிய சிந்தனை உருவாகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி இருக்கின்ற விடுதலை வாசகர் வட்டத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டுதலை தெரிவித் தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக இளம் பேச்சாளர் வழக்குரைஞர் சுமித்ரா அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்வி கொள்கை 2020 எனும் மதயானை நூல் பற்றிய மிகச் செரிவான திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில், தேசிய புதிய கல்விக் கொள்கை என்பது புதுமையை உருவாக்குவது அல்ல. பழைய ஸநாதனக் கல்வி முறையை திணிக்கும் முயற்சியே. கல்வியால் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை, மனித வளத்தால் நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை வஞ்சிக்க வரும் காவிக் கல்வியே இந்தத் திட்ட மாகும். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு புள்ளி விவரங்களையும், கள நிலவரங்களையும் தெளிவாக ஒவ்வொரு வரும் புரிந்து கொள் ளும் வகையில் அமைந் திருக்கிறது. இத்தகைய காவிக் கொள்கையை கறுப்பால் தடுப்போம்! தமிழ்நாட்டை காப்போம்! என்று உரையாற்றினார்.
நிகழ்வில் பகுத்தறி வாளர் கழக ஆலோசகர் சு. முழுமதி, மாநகர கழக தலைவர் ந. ஜெகதீசன், மாநகர கழக செயலாளர் அ. பிரவீன் முத்துவேல், ப. க. துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு. சு. கண்மணி, கழக சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், தேவ கோட்டை நகர தலைவர் வீ. முருகப்பன், இளம் பேச்சாளர்கள் நா. நவீன், ந. முகமது ஃகைப், அ. மாதாரசி, அ. சாருமதி மற்றும் ராஜா முகமது, சத்திய மூர்த்தி, சீனிவாசன், அபிராமி, சு. ராம்குமார், சிறீராம் நாகராஜ், து சசிகலா, வி. அறிவழகன், நிவேதா, கற்பகம், என். சாந்தி, அப்துல் ரகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஆ. பழனிவேல் ராசன் நன்றி கூறினர்.