ஜூலை 1ஆம் தேதி-தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூன் 25 தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

ஓரணியில் தமிழ்நாடு

இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (24.6.2025) அளித்த பேட்டி வருமாறு:

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பின் கீழ் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க உள்ளார். அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட செயலா ளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் பேரணி யாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க உள்ளனர்.

2 கோடி உறுப்பினர்கள்

ஏறத்தாழ 2 கோடி பேரை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ப் பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உறுப் பினராக முன்வரக்கூடியவர்களை திமுகவில் சேர்க்க வேண்டும்.  திமுகவின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, டிஜிட்டலில் ஒரு செயலியின் மூலமாகவும், படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

முதலமைச்சர்
தொடங்கி வைப்பார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லக் கூடிய அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் எந்த ஓர் அரசியல் சூழ்நிலையிலும், மதங்களையோ, ஜாதிகளையோ பெருட்படுத்தாமல் அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப் போதும் ஓரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஓரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக் கூறு என்பதை மனதில் வைத்து, இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் வரும் 1ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

வடமொழிக்கே முன்னுரிமை

ஒன்றிய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வட மொழிக்கு அதிக முக்கியத்துவத்தையும், நிதியையும் ஒதுக்கியுள்ளனர். இதனால் வட மொழிக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை மீண்டும் உறுதியாகியுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் கலைஞர் தமிழுக்கு செம்மொழித் தகுதி நிலையை உருவாக்கினார். வட மொழிக்கு இருக்க கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உள்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போயுள்ளதால் தான், தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்று கூறுகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *