பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 15- பள்ளிக் கல்வியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்த வேலை நாட்கள் 210 ஆகும். அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு. செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை இந்த விடுப்பு நாட்களிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையும் அடங்கும். டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு. டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை. அதன் பின் பள்ளி வேலை நாட்கள். 2026ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை விடுப்படும்.

ஏப்ரல் 10ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு. ஏப்ரல் 24ஆம் தேதி கடைசி வேலை நாள். ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை. விளையாட்டு பாடத்திற்கு வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் 4 Easy English, Fun with maths வகுப்புகள் நடத்தப்படும்.

11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிபோதனை, மதிப்புக் கல்வி மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவற்றிற்கு பாட வகுப்புகள் ஒதுக்கீடு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பாட வகுப்புகளில் மாணவர்கள் அவர்களை குறித்து எழுதுதல் என மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்களை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என நாட்காட்டியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *