வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 23  சென்னை மெரினாவில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு  பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க 30க்கும் மேற்பட்ட நிபந்தனை களுடன் ஒன்றிய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

மெரினாவில் அறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் இறு திக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக் கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெ டுத்தது. இந்த நினைவிடத் துக்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை குழு மம் அனுமதியளித்த நிலை யில், ஒன்றிய அரசின் கடற் கரை ஒழுங்குமுறை ஆணை யத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக் கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்டு, அந்த அறிக் கையும் அனுப்பப்பட்டது. இதை ஆய்வு செய்த கடற் கரை ஒழுங்குமுறை ஆணை யம், பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறைக்கு ஒன்றிய சுற்றுச் சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில். ‘தமிழ்நாடு கடற்கரை மண் டல மேலாண்மை குழுமத் தின் பரிந்துரை மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய திட்ட அறிக்கை, வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் பரிந் துரைகள் ஆகியவற்றை ஏற்று, வங்கக்கடலில் முத் தமிழ் அறிஞர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனை களுடன் அனுமதி வழங்கப் படுகிறது’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 

ஆமைகள் வளை அமைந்துள்ள பகுதிகளில் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகள் நடை பெறக் கூடாது. கட்டுமானப் பணிகளுக்கு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதியில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்பது உட்பட 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது. தேவைப் படும்போது, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை உண்டு. கட்டுப்பாடுகள் மீறப் பட்டாலோ, திருப்திகரமாக இல்லாவிட்டாலோ இந்த அனுமதியை திரும்ப பெறவோ, நிறுத்தி வைக் கவோ அமைச்சகம் நட வடிக்கை எடுக்கும். இந்த அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 30 நாள்களுக்குள் மனு தாக்கல் செய்வதற்கும் அனுமதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *