மும்பை, ஜூன்.4- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்த போர் இந்தியர்கள் இடையே தேசப்பற்றை தூண்டியது.
இந்தநிலையில் சிறுவயது முதல் மாணவர்களிடம் தேசப்பற்றை ஊட்டும் வகையில் பள்ளி மாண வர்களுக்கு அடிப்படை ராணு வப் பயிற்சி வழங்கப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ததா புசே நேற்று (3.6.2025) மும் பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில் 1-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணு வத்துக்கான அடிப்படை பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர் களிடம் தேசப்பற்றை வளர்க் கவும், உடற்பயிற்சி வழக்கத்தை ஏற்படுத்தவும், ஒழுக்கத்தை வளர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த திட்டத்துக்கு முதல மைச்சர் தேவேந்திர பட்னா விஸ் சாதகமான பதிலை தெரி வித்துள்ளார். இதனை செயல் படுத்துவதற்காக உடற்கல்வி ஆசிரி யர்களுடன் 2 லட்சத்து 50ஆயிரம் மேனாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்