உடுமலை நாராயணசாமி மேனாள் தமிழ்த் திரைப் பாடலா சிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட் டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933 இல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். பின்னர் உடுமலை நாராயணகவி என்று பெயர் பெற்றார்.