புதுடில்லி, மே 17 பாஜ கட்சிக்குள் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி பேசவே கூடாது என்று கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பாஜக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உலக நாடுகளில் உள்ள தனது தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மெதுவாக குறைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலைகளை அதி களவில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டதாக அண்மை யில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம்,‘‘என் நண்பரே, நான் உன்னை மிகவும் நன்றாக நடத்துகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்களுடன் வருவாய் ஈட்டுகிறீர்கள். ஆனால், இப்போது நீ இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கட்டுவதாகக் கேள்விப்பட்டேன். நான் இதை விரும்பவில்லை. ஏனென்றால் இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். எனவே, இந்தி யாவில் விற்பனை செய்வது மிகவும் கடினம். எனவே, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தொழிற்சாலைகளை பெரி தாக கட்டமைப்பதை நான் விரும்ப வில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அடாவடி பேச்சுக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்தன.
மேலும் நடிகையும், பாஜக நாடா ளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணமாக இருக்கும்? டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டுமே. ஆனால், உலகின் மிகவும் அதிகம் விரும்பப்படும் நபராக பிரதமர் மோடி உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக தான் அதிபர். ஆனால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர். டிரம்ப் ஆல்பா மேல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நம் பிரதமர் எல்லா ஆல்பா மேலுக்கும் மேலான அப்பா. இது டிரம்ப்பின் பொறாமையா அல்லது ராஜதந்திர பாதுகாப்பின்மையா?” எனக் கேள்வி எழுப்பி, மோடி புகழ் பாடினார்.
அச்சம்; எச்சரிக்கை; நீக்கம்
கங்கனா ரனாவத் போல பாஜக வினர் பலரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்தனர். டிரம்ப்பை விமர்சித்தால் உலக நாடுகளில் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானியின் முறைகேடுகளை அவர் விசாரிக்க ஆரம்பித்து விடுவார் என்ற அச்சத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “டிரம்ப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது, பேசவும் கூடாது” என கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து கங்கனா ரனா வத்,”ஆப்பிள் நிறுவன நிர்வாகியிடம் அமெரிக்க அதிபர் பேசியது குறித்து நான் பதிவிட்டதை நீக்குமாறு பாஜக வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், என்னுடைய அந்த தனிப்பட்ட கருத்தை தெரிவித்த தற்கு வருத்தப்படுகிறேன். அறி வுறுத்தல்களின்படி நான் உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நன்றி” என டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போல பாஜகவினரும், அய்டி விங் குழுவினரும் டிரம்ப்பை விமர்சித்த பதிவுகளை நீக்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட விஷயங்களால் பாஜக கட்சிக்குள் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரு கின்றனர்.