சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு ஜூன் 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, மே 13 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கு சிறந்த நூல்களை அளித்த நூலாசிரியர் களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், 1.1.2024 முதல் 31.12.2024 வரை தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழுக்காக வரவேற்கப்படுகின்றன.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் என 33 வகைப்பாட்டில் சிறந்த நூலாக ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு பாராட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். 5 நூல்களுடன் போட்டிக்கான விண்ணப்பத்தை ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ்வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 16-ஆம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *