4.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< எல்லாவற்றுக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி இந்து:
< சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) உள் தரவுகளைப் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட கவுதம் அதானியின் மருமகன் பிரணவ் அதானி மீது ஒன்றிய அரசு வழக்குத் தொடருமா என காங்கிரஸ் கேள்வி.
< ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியின் நோக்கத்தை மேலும் மேம்படுத்தும் என்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் கருத்து.
< ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி: மாநில அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை அமைக்க நிலம் மற்றும் நிதி ஆதாரங்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு ஊதியத்தையும் மாணவர்களுக்கு வசதிகளையும் வழங்குகிறது என சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< கல்வி நிறுவனங்களில் பகுத்தறிவு, சமூக நீதி என்ற இரண்டும் போதிக்கப்பட வேண்டும்; இவற்றுக்கு எதிராக எந்தவொரு நிகழ்வும் நடத்தப்பட்டால் அரசாங்கத்தின் எதிர்வினை கடுமையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை.
< உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்துகள் தொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை மே 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த காங்கிரஸ் கருநாடக அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது எளிதாகிவிட்டது, ஏனெனில் இந்த நடவடிக்கை இப்போது எதிர்க்கட்சியான பாஜக, ஜேடி(எஸ்) ஆகியோரிடமிருந்து அதிக எதிர்ப்பை எதிர் கொள்ள வாய்ப்பில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.
< ஜாதி வாரி கணக்கெடுப்பு: தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி பிரதமருக்கு கடிதம்.
– குடந்தை கருணா