ஒசூர், மே 2- ஒசூர் உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் சதுக்கத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பாவலர் கருமலைத்தமிழாழன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் சிறப்பு குறித்து அவர் இயற்றிய கவிதைகளைப் படித்தார்.
இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, ஒன்றிய அமைப்பாளர் பூபதி,பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், திமுக மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் ஞானசேகரன், மோகன், பாரதி, கார்த்திக் முருகன், ராணி, பிரகாஷ், விக்னேஷ், கவிஞர்கள் முருககுமரன்,ராசு மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை ஒரு வாரகாலம் அரசு கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றி தெரிவிக் கப்பட்டது.
முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் நன்றி தெரிவித்தார்.