செய்திச் சுருக்கம்

2 Min Read

காயம் அடைந்தவர்களுக்கு
ராகுல் நேரில் ஆறுதல்

சிறீநகர் சென் றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காய மடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் ராகுல் தெரிவித்தார்.

100 சதவீத தேர்ச்சி.. பள்ளிகளுக்கு
பாராட்டுச் சான்றிதழ்

10,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மோடி, பிரதமர் மோடியிடம் கேட்கும் கேள்வி : பதில் இருக்கா?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து,  பிரதமர் மோடியின் பழைய காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அப்போது அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். ‘நாட்டின் பிரதமரையும் மீறி எப்படி இவ்வாறு ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது’ என  மோடி ஒரு தாக்குதலை குறிப்பிட்டு, அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார். இந்த காணொலியை தற்போது, எதிர்கட்சிகள் வைரலாக்கி, அவர் கேட்ட கேள்விகளயே முன்வைக்கின்றனர்.

டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு..!

பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ெஹல் ஆண்ட் (Hell Ant) எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பில்கேட்ஸின்
தன்னம்பிக்கை வரிகள்..!

* வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும்.

*வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப் பதும் அவசியம்.

* உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம்.

* பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற் கான தீர்வையும் தேடுங்கள்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *