டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திமுக கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரி: சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தித் திணிப்பே,மாணவர்கள் கவனமாக இருந்து என்றும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்.
* 2027 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தொடரும் – அகிலேஷ் அறிவிப்பு.
* முதலமைச்சர் நாற்காலிக்காக நிதிஷ் குமார் கூட்டணிகளை மாற்றுவார் – மல்லிகார்ஜூன கார்கே தாக்கு.
* தெலங்கானா அரசுக் கல்லூரிகளில் சமஸ்கிரு தத்தில் சுற்றறிக்கையால் சர்ச்சை; சுற்றறிக்கையை ரத்து செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இப்போது ஒரு பழைய, நாகரிக இந்தியாவிற்கும் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியாவிற்கும் இடையிலான போர் நடைபெறுகிறது; இதற்கு
ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம், என்கிறார் எழுத்தாளர் தல்வீன் சிங்
* ‘உச்சநீதிமன்றத்தை விமர்சித்த 2 பாஜ எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. 10 மசோதாக்களுக்கு அனுமதியளித்த விவகாரம்; உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த 2 பாஜக எம்பிக்கள்: தனிப்பட்ட கருத்து என்று ஜே.பி நட்டா மழுப்பல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இளைஞர்கள் ஜாதி அடிப்படையிலான வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.
தி இந்து:
* வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் – கால்நடைகள் மோதிய சந்தர்ப்பங்களில் கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு குறித்த அறிக்கை.
* மகாராட்டிராவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு மகாராட்டிரா மொழி குழு எதிர்ப்பு.
* நீதிமன்றத்திற்கு எதிரான “மோசமான அவதூறான” கருத்துகளுக்காக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்க ஒப்புதல் கோரி அட்டர்னி ஜெனரல்
ஆர். வெங்கட்ரமணிக்கு உச்சநீதிமன்ற வழக்குரை ஞர், கடிதம்
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுத் திறனாளிகளை பரிந்துரைப்பது ஒரு முன்னோடி நடவடிக்கை என்கிறது தலையங்கம்.
* ஒன்றிய-மாநில உறவுகள் தொடர்பான அரசமைப்பு, சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் விதிகளை மறு ஆய்வு செய்வதற்கும், மாநிலங்களின் சுயாட்சியை வலுப்படுத்துவதற்கும், நியாயமான கூட்டாட்சி சமநிலையை உறுதி செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் எனது அறிவிப்பு – மாநில களங்களில் ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் ஊடுருவலை பின்னுக்குத் தள்ளுவதற்கான எங்கள் தேடலின் அடுத்த தர்க்கரீதியான படியாகும் என தனது கட்டுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
* ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒரு மாநிலத்திற்கான சில மசோதாக்களை நிறைவேற்றுவதை விட – இது பல மாநிலங்களில் இதேபோன்ற நிலையில் உள்ள அரசாங்கங்களுக்கும் ஆளுநர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலை அமைத்துள்ளது என்கிறார் கட்டுரையாளர் கவுதம் பாட்டியா
– குடந்தை கருணா