எச்சரிக்கை! ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை

Viduthalai
3 Min Read

மும்பை, ஏப்.13- மகாராட்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராட்டிர மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சவுத்ரி (54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர், வலைத்தளம் ஒன்றில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய ஆசிரியை சுனிதா சுமார் 50 நாள்களில் அதில் ரூ.66 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் முதலீட்டையும் அதனுடைய லாபத்தையும் அந்த நபரிடம் ஆசிரியை கேட்டுள்ளார்.
ஆசிரியை சுனிதா பணம் கேட்கத் தொடங்கியதும் அந்த நபர் இரண்டு அலைபேசிகளையும் அணைத்து வைத்துவிட்டார். இதுதொடர்பாக ஆசிரியை கோல்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து மோசடி நபரின் அய்பி முகவரி, அலைபேசி இருப்பிடங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்துவதா?
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள்
– ஒன்றிய அரசுக்குக் கடிதம்!
புதுடில்லி, ஏப். 13- – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிக மோசமாக பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளை நோக்கி பொதுமக்கள் அதிகாரப்பூர்வமாக கேள்வி கேட்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. தற்போது, பா.ஜ.க. அரசு, கொண்டுவந்துள்ள டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது.
இந்நிலையில் டிஜிட்டல் தனி நபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, உள்ளிட்ட 120–க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.அய். சட்டத்தை பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிடுங்கள்: இந்தியா கூட்டணி ஆட்சியாளர்கள், அதிகாரிகளை நோக்கி மக்கள் அதிகாரப்பூர்வமாக கேள்வி கேட்கும் உரிமையை வழங்கும் ஆர்.டி.அய். சட்டம் பா.ஜ.க. அரசு கொண்டுவந்த டிஜிட்டல் தனிநபர்தரவுகள் பாதுகாப்பு சட்டம், ஆர்.டி.அய். சட்டத்தை பலவீனப்படுத்துகிறது டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு 120–க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கப்பட்டது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதா?
உடனே இந்தப் பழக்கத்தை மாற்றுங்கள்! இல்லையென்றால் ஆபத்து!
அண்மையில் வெளியான ஓர் முக்கிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது – ஒரே இடத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பதை தவிர்ப்பது, முதுகுவலியைத் தவிர்த்து, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அதாவது, 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும்.
மனம் சோர்வாக இருக்கிறதா? எடை கூடுகிறதா? உங்கள் உடல் போதும் என்று சொல்லாமல் சொல்கிறது!
அமரும் நேரம் அதிகமானால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: இதய நோய்களின் வாய்ப்பு அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மூட்டுகள் பலவீனமாகும் முதுகுவலி, இடுப்பு இறுக்கம் மனச்சோர்வு, கவனச்சிதறல் உடல் பருமன், சர்க்கரை நோய் சிக்கல்
அமர்ந்த நிலையை 40 நிமிடங்களுக்கு மாறினால்: இரத்த ஓட்டம் சீராகும் மனநிலை மேம்படும் எடையை கட்டுப்படுத்தலாம் முதுகுவலி குறையும் எண்டோர்பின் சுரப்பால் உற்சாகம் அதிகரிக்கும் சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரை செய்வது போல், இது டைபெட், ஹார்மோன் சமநிலை ஆகியவற்றுக்கும் உதவியாக அமையும்.
எப்படி செயல்படலாம்?
ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்கவும் அலுவலகத்தில் சிறிய விளையாட்டுப் போட்டிகள் (டேபிள் டென்னிஸ் போன்றவை) வீட்டிலும் எளிய உடற்பயிற்சி நடவடிக்கைகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *