புதுக்கோட்டை, ஏப்.9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு குற்றமுடையதே என்ற தலைப்பில் எழுச்சியோடு தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ஓவியர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.
விராலிமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளங்குமரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் வெ.ஆசைத்தம்பி வரவேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் பேரா.மு.அறிவொளி, மாவட்டச்செயலாளர் ஆசிரியர் ப.வீரப்பன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மூன்று சொற்பொழிவாளர்கள்
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் துவக்க வுரையாற்றியபோது இங்கு நடைபெறும் நிகழ்ச்சியானது அருமையான தலைப்பு. திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் மிகுந்த நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்ற மூன்று சொற்பொழிவாளர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
தந்தை பெரியாருடைய கொள்கைதான் வெற்றி பெறும்
திராவிடர் கழகத்தின் அற்புதமான பேச்சாளர்கள். அவர்களுடைய கருத்து களைக் கேட்டுச் சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போது நமது பெருமைக்குரிய குழந்தைவேலு அவர்கள் தமிழ்நாட்டிலேயே ஒரு அற்பு தமான, தனித்துவமான தொண்டர். நம்முடைய தமிழர் தலைவர் அவர்களின் அன்பை யும் பாராட்டையும் பெற்றவர். காரணம் தந்தை பெரியாருடைய இந்தக் கொள்கைதான் வெற்றி பெறும், இந்தக் கொள்கைதான் நம்மை ஆளும், இந்தக் கொள்கையோடு இருந்தால்தான், நாம் சுயமரியாதையோடு வாழ முடியும் என்கிற நம்பிக்கையோடு தொண்டாற்றி வரக்கூடிய ஓவியர் குழந்தை அவர்க ளுக்கு உளமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு நடைபெறக் கூடிய இந்த நிகழ்ச்சியை ஒரு மாநாட்டைப்போல பிரம்மாண்ட மேடை, நகர் முழுவதும் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து இயக்கத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தனி ஒரு ஆளாக இருந்து இந்தளவுக்கு பிரம்மாண்டமாகச் செய்ய முடியும் என்றால் அது தந்தை பெரியாரின் தொண்டரால்தான் முடியும். மாவட்டம் முழுவதும் இதே போன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
வழக்காடு மன்றத்திற்கு கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன் நடுவராகவும், கழக பேச்சாளர்
இரா.பெரியார்செல்வன் வழக்கு தொடுத்தும், இராம.அன்பழகன் வழக்கை மறுத்தும் சிறப்பாக வாதிட்டார்கள். விவாதத்தின்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து செய்து வரும் துரோகம், கொடுமைகள், அரசியல் ரீதியான நெருக்கடிகள் என அனைத்தையும் பற்றி வழக்கு தொடுக்க, அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் ஆனால் மக்கள்தான் இன்னின்ன வழிகளைக் கையாண்டு பாஜகவைப் புறக்கணிக்க வேண்டும், அதைச் செய்ய வேண்டியது மக்கள்தான் என பதிலுரைத்தும் வழக்காடு மன்றத்தின் தங்களது வாதங்களை முன் வைத்தார்கள். நடுவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் ஒன்றிய அரசுதான் குற்றமுடையது என தீர்ப்பளித்தார்.
நிகழ்வில் மேலும் கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட துணைத்தலைவர் சு.கண்ணன், திரு மயம் ஒன்றிய தலைவர் அ.தமிழரசன், செயலாளர் க.மாரியப்பன், திருச்சி பொதுக்குழு உறுப்பினர் சி.கனகராசு, பொன்மலை விஜயராகவன், விடுதலை செய்தியாளர் ம.மு.கண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.