அறிவியல் முத்துகள்

viduthalai
1 Min Read

சீனாவில் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெஹோலியா லாங்செங்கி (Jeholia longchengi) இனத்தைச் சேர்ந்த தேளின் தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் முதன்மையான உணவாகப் பல்வேறு பூச்சிகள் இருந் திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். இந்த தேள் 10 செ.மீ. நீள உடல் உடையது.

• • • • •

அபியேசி குடும்பத்தைச் சேர்ந்த அரிய தாவர இனம் ஹைமெனிடியம் அமாபில் (Hymenidium amabile). இது அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. தற்போது இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் நூறாண்டுக்குப் பிறகு அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

• • • • •

ஆஸ்திரேலியாவின் கேர்ட்டின் பல்கலை.யைச் சேர்ந்த புவியியலாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டறிந்துள்ளனர். இது 347 கோடி ஆண்டுகள் பழைமையானது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் பள்ளங்களிலே மிகப் பழையது இதுவே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *