உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து உடல் நலம் விசாரிப்பு!

viduthalai
0 Min Read

உளுந்தூர்பேட்டை,மார்ச் 24 உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 94) அண்மையில் குளியலறையில் மயங்கி விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு தக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று (23.3.2025) மாலை 5 மணி அளவில் அவரது இல்லம் சென்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உடல் நலம் விசாரித்து, ஆறுதல் மற்றும் தைரியம் கூறினார்.

உடன் விழுப்புரம் கழக மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முத்து, பெரியவரின் மகன் செல்வகுமார் ஆகியோர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *