காவல்துறையிடம் புகார்
கிருஷ்ணகிரி, மார்ச் 11- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளிஊராட்சிக்கு உட்பட்ட தாசனபுரம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமண வெங்கடரமணசுவாமி கோவிலில் 09.03.2025 அன்று காலையில் ஆர்.எஸ்.எஸ் அதன் சங்பரிவார் அமைப்புக்கள் இணைந்து பயிற்சி நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தலைமையில் திரண்டு ஒசூர் சாராட்சியர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சம்மந்தப்பட்ட கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கீழ் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தனிபட்ட இயக்கங்களோ,அரசியல் கட்சிகளோ நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று அரசாணை உள்ளது. அதையெல்லாம் மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் அவ்வாறு நிறுத்தா விடில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நட்க்கும் அதே நேரத்தில் அந்த இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகைப் போரட்டம் நடத்துவோம் என மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சாராட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இம் மனு அளிக்கும் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேனாள் மண்டல செயலாளர் நந்தன்,செம்பட்டி சிவா வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி செயலாளர்,இளையராஜா மாவட்ட ஊடக மையம் அமைப்பாளர், முத்துகுமார் ஒசூர் ஒன்றிய செயலாளர், ஆனந்த் பாபு, வினோத்குமார், சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.