வல்லம்,பிப்.23- 19.02.2025 அன்று நடைபெற்ற கோயம்புத்தூர், இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் (Indo Shell Castings Private Ltd., Coimbatore) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 69 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை துணை பொது மேலாளர் எஸ்.சக்திவேல் மற்றும் மனிதவள அலுவலர் டி.விக்னெஷ் ஆகியோர் வளாக நேர்காணலில் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.