கும்பமேளா ஒரு பிசினஸா? ரூபாய் மூன்று லட்சம் கோடி வருவாயாம்! சொல்லுகிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரயாக்ராஜ், பிப்.22 மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த விழா வரும் 26-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசும்போது கூறியதாவது:

வரும் 2027-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பாரதம் எட்டும். இந்த லட்சியத்தை எட்ட உத்தரப் பிரதேசம் உறுதுணையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக மாநில அரசு சார்பில் புதிதாக 10 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.28 லட்சம் கோடியை எட்டி உள்ளது. பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
ரூ.3 லட்சம் கோடி வருவாய்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவால் மாநிலத்தின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த விழாவால் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களால் உத்தர பிரதேச விவசாயிகளின் வருவாய் 1.5 மடங்காக அதிகரித்து உள்ளது. அனைத்து துறைகளிலும் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2029-ஆம் ஆண்டில் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுக்கும்.
கூடுதல் கவனம்
இதற்காக தொழில் துறை, விவசாயம், சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, வரி வசூல், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சேவை துறைகளில் கூடுதல் கவனம் செலுத் தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டில் பன்னாட்டு முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது உத்தர பிரதேசத்துக்கு ரூ.40 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. இதில் ரூ.15 லட்சம் கோடி மாநிலத்தில் முதலீடு செய்யப் பட்டு இருக்கிறது. இதன்மூலம் 60 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத் திருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *