அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் ஏதோ ஒரு நகருக்கு நிற்காமல் 13 மணி நேரம் 200 இந்தியர்களை கொண்டு வந்த ராணுவ விமானத்தில் அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரே ஒருகழிப்பறை அது, அவர்கள் பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு.
கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட இந்தியர்கள் 13 மணி நேரமும் உட்கார்ந்து பயணித்துள்ளனர். அவர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் மட்டுமே ஏறும் போது தரப்பட்டது; விமானம் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதாவது, விமானப் பயணத்தில் கழிப்பறைக்கோ, சிறுநீர் கழிப்பதற்கோ அனுமதிக்க மாட்டோம் என்று மறைமுகமாக கூறியுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். முதலில் பொதுவாக பேரிடர் மற்றும் அவசர நிலை காலங்களில் பொதுமக்களை ராணுவ விமானத்தில் செல்ல அனுமதிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது, அமெரிக்க ராணுவ விமானங்கள் ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை ராணுவ விமானத்தில் அழைத்துச் சென்றது.
எந்த ஒரு அவசர நிலை இல்லாதபோது, பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை மட்டுமே ராணுவ விமானத்தில் நாடு கடத்த பன்னாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் எந்த பிரச்சினையும் இல்லாதபோது, இந்தியர்களை பயங்கரவாதிகளைப் போல் விலங்குகளைப் போட்டு, கழிப்பறை, உணவு வசதிகள் எதுவுமே இல்லாமல், கடுங்குளிரில் தவிக்கவிட்டு இந்தியா அழைத்து வந்ததற்கு மோடி கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்துக்கொண்டு, கும்பமேளாவில் சென்று ஆற்றில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சிக் குளியல் போடுகிறார்.
அமெரிக்காவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் சமூக வலைதளப் பதிவு